ETV Bharat / business

கரோனா பாதிப்பு - ஸ்டார்ட்அப்களுக்கு சலுகைகள் வேண்டும்! - கோவிட் 19

டெல்லி: நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுள்ளதால் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாஸ்காம் கோரிக்கை விடுத்துள்ளது.

Nasscom
Nasscom
author img

By

Published : Apr 1, 2020, 8:46 AM IST

இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் மிகவும் அதிகரித்து வருகிறது. நாட்டில் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர வேறு எதற்கும் வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக பொதுமக்கள் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு கடனுக்கான தவணைகள், EMI, வருமான வரி தாக்கல் செய்வது உள்ளிட்டவற்றுக்கான காலக்கெடுவை மத்திய அரசு நீடித்திருந்தது.

இந்நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுள்ளதால் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுத்து மத்திய அரசு உதவ வேண்டும் என்று தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்கள் சங்கமான நாஸ்காம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அலுவலங்களின் வாடகை கட்டணம், ஊதியம் உள்ளிட்டவற்றை கொடுப்பதில், ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், இதனால் குறிப்பிட்ட காலக்கெடுக்குள் வேலைகளை முடிப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரிய நிறுவனங்களைப் போல் இல்லாமல் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பெரும் நிதிச் சிக்கலில் சிக்கியுள்ளன.

இதனால் ஸார்ட்அப் நிறுவனங்கள் தாக்கல் செய்ய வேண்டிய FIRC போன்றவற்றின் காலக்கெடுவை நீடிக்க வேண்டும் என்று நாஸ்காம் கோரிக்கை விடுத்துள்ளது. ஊழியர்களுக்கு மூன்று மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஊதியம் வழங்கத் தேவையான நிதியை வங்களில் எவ்வித கூடுதல் ஆவணங்கள் இன்றி வழங்கவேண்டும் என்றும் நாஸ்காம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் ஜிஎஸ்டி தாக்கல் செய்வதற்கான தாமதக் கட்டணங்களையும் ஸ்டார்அப் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ரத்து செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவால் பைஜூஸ் எடுத்த முக்கிய முடிவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.