மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஜிஎஸ்டி வரியின் காரணமாக பெரும்பாலான மிகப்பெரிய நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றன. இதனால் இந்திய பொருளாதாரம் நாளுக்கு நாள் சரிந்துகொண்டே செல்கிறது.
இந்நிலையில் கரூர் வயிஸ்யா வங்கி தலைமை அதிகாரி சேஷாத்திரி ஈடிவி பாரத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், ”பொதுவாக ஜூன் முதல் செப்டம்பர் மாதம்வரை பொருளாதார சரிவு ஏற்படுவது வழக்கம். ஊடக துறையில் இந்திய பொருளாரத்தின் மந்த நிலை மிகவும் மிகைப்படுத்தப்படுகிறது.
இந்திய பொருளாதாரத்தில் என்ன நடக்கிறது என்று அறிந்தபின் செய்திகளை வெளியிட வேண்டும். விரைவில் இந்திய பொருளாதாரம் மேம்படும். வங்கியின் வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை உருவாக்கியுள்ளோம். அமராவதியில் அதிக முதலீடு செய்யவுள்ளோம்” என்றார்.