ETV Bharat / business

மே 12 முதல் உற்பத்தியைத் தொடங்கும் மாருதி நிறுவனம்

டெல்லி: கார் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக செயல்படும் மாருதி சுசூகி, மே 12ஆம் தேதி முதல் மனேசரில் உள்ள ஆலையில் உற்பத்தியைத் தொடங்கும் என அறிவித்துள்ளது.

maruti-suzuki-to-begin-production-from-may-12

author img

By

Published : May 7, 2020, 7:29 PM IST

கரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் நீண்ட நாள்களாக தொழிற்சாலைகள் செயல்படாமல் மூடப்பட்டிருந்தன. இதனிடையே மே 3ஆம் தேதிக்கு பின் பல மாநிலங்களில் தொழிற்சாலைகள் நடத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டு வருகின்றன.

கார் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வரும் மாருதி சுசூகி மார்ச் 22ஆம் தேதியோடு தனது உற்பத்தியை நிறுத்தியது. இந்நிலையில் மே 12ஆம் தேதி முதல் மானேசரில் உள்ள ஆலையில் உறுத்தியைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாருதி சுசூகி சார்பாக பேசுகையில், ''ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி முதலே மனேசர் ஆலை செயல்படலாம் என ஹரியானா மாநில அரசு அனுமதி வழங்கியது. ஆனால் வாகன விற்பனை இல்லாமல் ஆலையில் வாகன உற்பத்தியை தொடங்குவதில் நிறுவனத்திற்கு விருப்பம் இல்லை. இதனால் மே 12ஆம் தேதி முதல் மனேசர் ஆலையில் வாகன உற்பத்தியை தொடங்குவதாக உள்ளோம்.

மாருதி சுசூகி நிறுவனம் பாதுகாப்பிற்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுக்கும். இதனால் அரசு விதித்த விதிமுறைகள் சரியாக பின்பற்றியே உற்பத்தி நடக்கும்'' எனத் தெரிவித்தனர். மாருதி சுசூகி நிறுவனத்தின் மனேசர் ஆலையில் பணி செய்யும் ஊழியர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 696 ஆகும். இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பாக மாருதி சுசூகி நிறுவனத்திற்கு, ஒரே ஒரு ஷுப்ட் அடிப்படையில் ஊழியர்களைப் பணியில் அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஹரியானாவின் மனேசரில் உள்ள மாருது சுசூகி உற்பத்தி ஆலை, குருகிராம் மாநகர எல்லைக்குள் இருந்தாலும், அது மாநகராட்சி எல்லைக்கு வெளியே தான் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அடுத்து இரு மாதங்களுக்கு இலவசம் - ஏர்டெல்லின் அடுத்த அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.