டெல்லி: இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி திருவிழா கால சலுகை விற்பனையை தொடங்க மாருதி நிறுவனம் கவனமாக திட்டமிட்டு வருகிறது.
மாருதி சுஸுகி நிறுவனம் செப்டம்பர் மாதத்தில், தனது கார்களின் மொத்த உற்பத்தி ஒரு லட்சத்து 66ஆயிரத்து 86 யூனிட்களாக உயர்ந்துள்ளதாக இன்று (அக்டோபர் 7ஆம் தேதி) அறிவித்துள்ளது. ஆனால், 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், மாருதி சுஸுகி நிறுவனம் ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து 32ஆயிரத்து 199 கார்களை மட்டுமே உற்பத்தி செய்திருந்தது.
இதன் மூலமாக மாருதி சுஸுகி கார்களின் ஒட்டுமொத்த உற்பத்தி 25.63 விழுக்காடு உயர்ந்துள்ளது. இந்தியாவில் கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, மார்ச் 24ஆம் தேதி ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டது. அதன்பின் இந்தியாவில் கார் உற்பத்தியும், விற்பனையும் அடியோடு முடங்கியது. அதன்பின் வந்த மாதங்களில் கார் விற்பனை மந்தமாக இருந்தது.
கலக்கல் வசதிகளுடன் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்டீல்த் ஸ்கூட்டர் அறிமுகம்!
ஆனால் சமீப காலமாக இந்தியாவில் கார்களின் விற்பனை படிப்படியாக அதிகரித்துவருகிறது. கரோனா அச்சம் காரணமாக பேருந்து, ஆட்டோ, வாடகைக் கார் உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்களை தவிர்த்து விட்டு, சொந்த கார்களில் பயணம் செய்வதை மக்கள் பாதுகாப்பாக கருதுவதுதான், இதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக கார்களுக்கான தேவை உயர்ந்து வரும் நிலையில், மாருதி சுஸுகி நிறுவனத்தின் மொத்த கார்களின் உற்பத்தியும் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது. அதே சமயம் மாருதி சுஸுகி நிறுவனத்தின் பயணிகள் வாகன உற்பத்தியும் 24.1 விழுக்காடு உயர்ந்துள்ளது. 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், பயணிகள் வாகன உற்பத்தி வெறும் ஒரு லட்சத்து 30ஆயிரத்து 264 யூனிட்களாக மட்டுமே இருந்தது.
ஆனால் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 61ஆயிரத்து 668 யூனிட்களாக அதிகரித்துள்ளது. ஆல்டோ மற்றும் எஸ்-பிரெஸ்ஸோ ஆகிய மாடல்களை உள்ளடக்கிய மினி கார்கள் பிரிவில், மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ஆயிரத்து 73 யூனிட்களை உற்பத்தி செய்திருந்தது. அது தற்போது 30ஆயிரத்து 492 யூனிட்களாக உயர்ந்துள்ளது. இது 32.15 விழுக்காடு வளர்ச்சியாகும்.
இந்தியாவில் ரவுண்ட் அடிக்க தயாரான உபேர் ஆட்டோ!
அதே நேரம், வேகன்ஆர், செலிரியோ, இக்னிஸ், ஸ்விஃப்ட், பலேனோ, டிசையர் ஆகிய கார்களை உள்ளடக்கிய காம்பேக்ட் கார்கள் பிரிவில், மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 75,264 யூனிட்களை மட்டுமே உற்பத்தி செய்திருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது 90ஆயிரத்து 924 யூனிட்களாக உயர்ந்துள்ளது. இது 20.8 விழுக்காடு வளர்ச்சியாகும்.
இதேபோன்று ஜிப்ஸி, எர்டிகா, எஸ்-க்ராஸ், விட்டாரா பிரெஸ்ஸா, எக்ஸ்எல்6 ஆகிய கார்களை உள்ளடக்கிய யுடிலிட்டி வாகனங்கள் பிரிவிலும், கார்களின் உற்பத்தி 44.55 விழுக்காடு உயர்ந்துள்ளது. இந்த பிரிவில் மாருதி சுஸுகி நிறுவனம் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 18ஆயிரத்து 435 கார்களை மட்டுமே உற்பத்தி செய்திருந்தது.
இந்த எண்ணிக்கை நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 26ஆயிரத்து 648 யூனிட்களாக உயர்ந்துள்ளது. மாருதி சுஸுகியின் பயணிகள் வாகனங்களை போலவே, அதன் இலகுரக வர்த்தக வாகனமான சூப்பர் கேரியின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 1,935 சூப்பர் கேரி வாகனங்களை மட்டுமே உற்பத்தி செய்திருந்தது.
ஊரடங்கு காலத்தில் தமிழ்நாடு மென்பொருள் ஏற்றுமதி அதிகரிப்பு!
இந்த எண்ணிக்கை நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில் 4,418 யூனிட்களாக உயர்ந்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவன கார்களின் உற்பத்தி அதிகரித்திருப்பது, கரோனா பிரச்னையால் ஏற்பட்ட பெரும் வீழ்ச்சியில் இருந்து இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை மீண்டு வருவதற்கான அறிகுறியாகவும் பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் தான் மாருதி சுஸுகி நிறுவனம் கவனமாக திருவிழா சலுகை விற்பனையை மேம்படுத்த நல்ல திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.