மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று (செப். 02) வர்த்தகமானதைவிட சுமார் 33 புள்ளிகள் உயர்ந்து இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து இன்று (செப். 03) நாள் முழுவதும் ஏற்ற - இறக்கத்திலேயே வர்த்தகமான இந்தியப் பங்குச்சந்தை, தனது வர்த்தகத்தை சரிவில் நிறைவு செய்தது.
இன்றைய வர்த்தக நாள் இறுதியில் சென்செக்ஸ் 95.09 புள்ளிகள் (0.24 விழுக்காடு) உயர்ந்து 38,990.94 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 7.55 புள்ளிகள் (0.07 விழுக்காடு) குறைந்து 11,527.45 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக ஐசிஐசிஐ நிறுவனத்தின் பங்குகள் இரண்டு விழுக்காடு வரை சரிவடைந்தது. மேலும், பாரதி ஏர்டெல், ஆக்சிஸ் வங்கி, கோட்டக் வங்கி, பவர் கிரிட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவில் தங்களது வர்த்தகத்தை நிறைவு செய்தன.
மறுபுறம் டைட்டன், டெக் மஹேந்திரா, நெஸ்லே இந்தியா, மாருதி, சன் பார்மா, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன.
சர்வதேச பங்குச் சந்தை
சர்வதேச அளவில் டோக்கியோ, சியோல் பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டும், ஷாங்காய், ஹாங்காங் ஆகிய பங்குச் சந்தைகள் சரிவிலும் தங்கள் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
அதே நேரம், ஐரோப்பிய பங்குச் சந்தைகள் தற்போது ஏற்றம் கண்டு வர்த்தகமாகி வருகின்றன.
கச்சா எண்ணெய் விலை
சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை 1.40 விழுக்காடு அதிகரித்து, பேரல் ஒன்று 43.81 அமெரிக்க டாலர்களுக்கு வர்த்தகமானது.
இந்திய ரூபாய் மதிப்பு
அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 44 பைசா குறைந்து 73 ரூபாய் 47 காசுகளுக்கு வர்த்தகமானது.
இதையும் படிங்க: ஆறு மாதங்களுக்குப் பின் குறைந்துள்ள டீசல் விலை!