வரலாறு காணாத அளவிற்கு மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 581.28 புள்ளிகள் சரிந்து, 28288.23 எனவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 205.35 புள்ளிகள் சரிந்து 8263.45 எனவும் வர்த்தகமாகியுள்ளது.
கரோனா வைரஸ் தாக்குதலால் பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கிட்டத்தட்ட ஒரே மாதத்துக்குள் சென்செக்ஸ் 10,000 புள்ளிகளுக்கு மேல் சரிவைச் சந்தித்துள்ளது. சென்செக்ஸ், நிஃப்டியில் உள்ள நிறுவன பங்குகள் இதுவரை சந்தித்திராத சரிவைச் சந்தித்து வருகின்றன.
இதுவரை பங்குச்சந்தை சரிவால் பல லட்சம் கோடி ரூபாயை பங்குதாரர்கள் இழந்துள்ளனர். எல்லா பங்குகளும், சரிவைச் சந்திப்பதால் பங்குச்சந்தை மீண்டும் சரிய வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: தொடர்ச்சியாக சரியும் இந்திய பங்குச் சந்தைகள்