கரோனா நோய்த் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சில தளர்வுகளை தற்போது மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில், மஹிந்திரா கார் நிறுவனம் தனது விற்பனையை ஆன்லைன் மூலம் அறிமுகப்படுத்தி உள்ளது.
இது குறித்து மஹிந்திரா கார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் வீஜே நக்ரா கூறுகையில், “கரோனா நோய்த் தொற்றின் காரணமாக பொதுமக்கள் வெளியில் வர முடியாத சூழ்நிலை உள்ளது. அதேபோல், பொதுமக்கள் தகுந்த இடைவெளி, முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது.
இந்நிலையில், மஹிந்திரா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் ஆன்லைனில் தனது விற்பனையை தொடங்கியுள்ளது. ஆன்லைன் மூலம் நிதி உதவி பெறுதல், வாகன காப்பீடு, உடனடி எக்ஸ்சேஜ், கார் குறித்த விவரங்களை பெறுவது, கார் முன்பதிவு செய்வது உள்ளிட்ட வசதிகளை எளிதாக பெறும் வகையில் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்காக இந்தியா முழுவதும் 270 விநியோகஸ்தர்கள், 900 சேவை மையங்கள் ஆன்லைன் தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, டெஸ்ட் டிரைவ்கள், ஆவண சேகரிப்பு, வாகன விநியோகம் போன்ற வாடிக்கையாளர் தொடர்பு செயல்முறைகளில் இந்நிறுவனம் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” என்றார். கார் வாங்க நினைப்பவர்கள் www.mahindrasyouv.com என்ற தளத்தை அணுகலாம்.
இதையும் படிங்க:அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்வு: வேலையில்லாதவர்களை வஞ்சிக்கும் செயல்!