மதுரை : மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ளது ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகம். இங்கு மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமன்றி விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பல்வேறு வகையான மலர்கள் விற்பனைக்கு வருகின்றன.
கோயில் திருவிழாக்கள், முகூர்த்த காலங்களில் இங்கு பூக்களின் விற்பனை அதிகரிப்பதுடன் விலையும் கூடுதலாக இருக்கும். குறிப்பாக மதுரை மல்லியின் விலை பிற பூக்களை காட்டிலும் சற்று கூடுதலாகவே இருப்பது வழக்கம்.
பூக்களின் விலை நிலவரம்
- மதுரை மல்லி - ரூ.1000
- கனகாம்பரம் - ரூ.2000
- பட்ரோஸ் - ரூ.300
- அரளி - ரூ.400
- செவ்வந்தி - ரூ.150
- மரிக்கொழுந்து - ரூ.100
- தாமரை- ரூ.10
- துளசி- ரூ.80
நாளைய (செப்.10) தினம் விநாயகர் சதுர்த்தி என்பதால் பூக்களின் விலை மேலும் கூடுவதற்கு வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கரைபுரளும் வெள்ளத்தில் பாலத்தை கடக்கும் மக்கள்