ETV Bharat / business

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 74%: மக்களவையில் மசோதா நிறைவேற்றம் - மக்களவையில் காப்பீட்டுத்துறை மசோதா நிறைவேற்றம்

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 74 விழுக்காடாக உயர்த்தும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Lok Sabha
Lok Sabha
author img

By

Published : Mar 22, 2021, 3:50 PM IST

மக்களவையில் இன்று காப்பீட்டுச் சட்டத்திருத்த மசோதா, 2021-ஐ மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்செய்தார். காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 49 விழுக்காட்டிலிருந்து 74 விழுக்காடாக உயர்த்த இந்த மசோதாவில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த மசோதா அறிமுகமான பின், அது தொடர்பாக பேசிய காங்கிரஸ் உறுப்பினர் மனீஷ் திவாரி, இந்திய காப்பீட்டு நிறுவனங்கள், லட்சக்கணக்கான இந்திய மக்களுக்கு இந்த மசோதா பாதகமான விளைவை ஏற்படுத்தும் என்றார்.

அதற்குப் பதிலளித்த பாஜக உறுப்பினர் ஜதாம்பிகா பால், இந்த மசோதா மூலம் இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் காப்பீட்டுத் திட்டங்கள் சென்றுசேரும் என்றார்.

வாக்கெடுப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் அவையைவிட்டு வெளியேறிய நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்குப் பின் இந்த மசோதா சட்டமாக மாறும்.

இதையும் படிங்க: 'ஒரு சார்ஜில் 482 கிமீ பயணம்: அதிரவைக்கும் பிஎம்டபிள்யூவின் எலக்ட்ரிக் கார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.