ETV Bharat / business

கரோனா வைரஸுக்கும் மத்திய பட்ஜெட்டுக்கும் இப்படி ஒரு தொடர்பா? - Budget 2020-21

சீனாவில் வேகமாகப் பரவிவரும் கரோனா வைரஸ் தொற்றால், இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா ஸ்மார்ட்போன் சந்தையும் சரிவை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நிலைமை வருங்காலத்தில் ஏற்படாமல் இருக்க புதிய திட்டம் ஒன்றை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸுக்கும் மத்திய பட்ஜெட்டுக்கும் இப்படி ஒரு தொடர்பா?

author img

By

Published : Feb 2, 2020, 4:48 PM IST

Updated : Mar 17, 2020, 5:33 PM IST

வூஹானும் கரோனாவும்

கிழக்கு சீனாவின் ஹூபே மாகாணத்தின் தலைநகர் வூஹான். சீனாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான இந்த வூஹான் நகரில்தான், கடந்த மாதம் (ஜனவரி) கரோனா எனப்படும் 2019-nCoV வைரஸ் தொற்று முதன்முதலில் பரவியது.

கரோனா வைரஸ் முதலில் எப்படி மக்களிடையே பரவியது என்பது குறித்து தெளிவான தகவல்களை சீனா வெளியிடவில்லை. இருப்பினும், வூஹான் பகுதியில் வனவிலங்குகளை உயிருடன் விற்பனை செய்யும் சந்தைகள் உள்ளன.

ஸ்மார்ட்போன் உற்பத்தி
ஸ்மார்ட்போன் உற்பத்தி

அங்கிருந்துதான் முதன்முதலில் கரோனா வைரஸ் நோய் தொற்று பரவியிருக்கலாம் என்று சீன அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வனவிலங்குகளை விற்கும் சந்தைகள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

தீவிரமடையும் கரோனா

கரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக சீனா முழுவதும் பரவிவருகிறது. கரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனாவில் உயிரிழப்பின் எண்ணிக்கை இதுவரை 304ஆக உயர்ந்துள்ளது. மேலும், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் ஸ்மார்ட்போன் பயன்பாடு
அதிகரித்துவரும் ஸ்மார்ட்போன் பயன்பாடு

இதனால், சீனாவின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவே மக்கள் அஞ்சுகின்றனர். குறிப்பாக வூஹான் நகரில் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. நகரில் வாழும் 11 மில்லியன் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனாவில் பல்வேறு பகுதிகளிலும் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சீன பொருளாதாரம் வீழ்ச்சியடையும் ஆபத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

தொடரும் ஆராய்ச்சிகள்
தொடரும் ஆராய்ச்சிகள்

ஸ்மார்ட்போன் சந்தை

உலகின் ஸ்மார்போன் உற்பத்தி செய்யும் நாடுகளில் முன்னணியில் இருப்பது சீனா. இருப்பினும் தற்போதுள்ள நிலையே சீனாவில் இன்னும் ஒரு மாத காலம் நீடித்தால், அந்நாட்டின் ஸ்மார்ட்போன் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படலாம் என்பதே துறை சார்ந்த நிபுணர்களின் கருத்து.

இதனால் இந்தியாவிலும் ஸ்மார்ட்போன் சந்தையில் பாதிப்பு ஏற்படலாம். இந்தியாவில் இருக்கும் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களான சியோமி, விவோ, ஓப்போ, ரியல்மீ போன்ற நிறுவனங்கள் சீனாவைச் சேர்ந்தவை.

அதிகரித்து வரும் கொரோனா வைரஸ்  தாக்கம்
அதிகரித்துவரும் கரோனா வைரஸ் தாக்கம்

இந்த நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் பொருத்தப்பட்டாலும், அவற்றின் பெரும்பாலான (88 விழுக்காடு) மூலப்பொருள்களும் உதிரி பாகங்களும் சீனாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. அதாவது மெமரி சிப், தொடுதிரை போன்றவை சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் அவை ஒருங்கிணைக்கப்படும். இந்தமுறைக்கு எஸ்.கே.டி. (Semi-knocked down - SKD) என்று பெயர்.

இந்தியாவில் முன்னணியிலுள்ள அனைத்து சீன நிறுவனங்களும் இந்த முறையையே கடைப்பிடிக்கின்றன. இதனால் கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு இன்னும் சிறிது காலம் தொடர்ந்தால், அது இந்தியா ஸ்மார்ட்போன் சந்தையை நிச்சயம் பாதிக்கும்.

கரோனாவுக்கும் பட்ஜெட்டுக்கும் உள்ள சம்பந்தம்

2020-21ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்தால் சுமார் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் நீடித்த இந்த உரையில் பல்வேறு துறைகள் சார்ந்த அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.

ஸ்மார்ட்போன் உற்பத்தி குறித்து பேசிய நிதியமைச்சர், "மின்சாதன பொருள்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்தால் செலவுகள் பெருவாரியாக குறையும். ஸ்மார்ட்போன்கள், மின்னணு உபகரணங்கள் உள்ளிட்ட பொருள்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டம் ஒன்றை நான் முன்மொழிகிறேன். இதற்கான மாற்றியமைக்கட்ட சிறப்பு ஊக்கத்தொகை திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்" என்றார்.

M-SIPS எனப்படும் இந்த மாற்றியமைக்கப்பட்ட சிறப்பு ஊக்கத்தொகை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், ஸ்மார்ட்போன் உற்பத்திக்கு தேவையான உதிரி பாகங்கள் அனைத்தும் இந்தியாவிலேயே உற்பத்திசெய்ய வாய்ப்புள்ளது. 2016-17ஆம் நிதியாண்டில் ரூ.94 ஆயிரம் கோடியாக இருந்த மொபைல்போனை உள்நாட்டில் உற்பத்திசெய்யும் சந்தை 2019-20ஆம் நிதியாண்டில் ரூ.1,35,000 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிது.

மத்திய பட்ஜெட் 2020
மத்திய பட்ஜெட் 2020

மேலும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் M-SIPS திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால் வரும் காலங்களில், சீனா உள்பட மற்ற எந்த நாடுகளில் எந்தவிதமான பாதிப்பு ஏற்பட்டாலும் அது இந்தியா ஸ்மார்ட்போன் சந்தையில் எவ்வித தாக்கமும் ஏற்படுத்தாது.

இதையும் படிங்க: அடுத்த தனியார் ரயில்... இந்த ரூட்டில்தான்!

Last Updated : Mar 17, 2020, 5:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.