கடும் நிதிச்சுமையில் சிக்கித் தவித்துவரும் லட்சுமி விலாஸ் வங்கியின் பங்குகள், கடந்த ஒரு வாரத்தில் கடும் சரிவைச் சந்தித்துள்ளன. மும்பை பங்குச்சந்தையில் இன்று (நவ.24) லட்சுமி விலாஸ் வங்கியின் பங்குகள் 9.88 விழுக்காடு சரிந்து 7.30 ரூபாய்க்கு விற்பனையானது.
இதன் மூலம் இந்த வங்கியின் பங்குகள் கடந்த ஆறு நாள்களில் மட்டும் 53 விழுக்காடு சரிவைச் சந்தித்துள்ளது. லட்சுமி விலாஸ் வங்கியின் நிதி நிலை கடந்த சில ஆண்டுகளில் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது.
இதையடுத்து முக்கிய நகர்வாக, அடுத்த ஒரு மாதத்திற்கு (நவம்பர் 17 முதல் டிசம்பர் 17 வரை) லட்சுமி விலாஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் 25,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கத் தடை விதித்து கடந்த 17ஆம் தேதி அன்று மத்திய நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.
அண்மைக் காலத்தில், யெஸ் வங்கி, பஞ்சாப், மகாராஷ்டிரா வங்கிகளுக்கு அடுத்தபடியாக மொரடோரியம் தடையைச் சந்திக்கும் மூன்றாவது வங்கியாக லட்சுமி விலாஸ் வங்கி உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வரலாறு காணாத உச்சத்தில் இந்தியப் பங்குச்சந்தை!