ETV Bharat / business

பேங்க் போகாமல் அக்கவுண்ட் ஓபன் பண்ணனுமா? - அப்போது இது உங்களுக்கான செய்திதான்! - காணொளி மூலம் வங்கி கணக்கை திறப்பது

ஹைதராபாத்: கரோனா பரவல் அதிகரித்துவருவதால், வங்கி சென்று கணக்கு தொடங்குவது சாத்தியமற்ற ஒன்றாக மாறியிருக்கிறது. ஆகவே, நீங்கள் வங்கி போகாமல் வங்கி கணக்கை தொடங்க வேண்டும் என்றால், காணொலி கேஒய்சி முறை (Video KYC) உங்களுக்கு பேருதவியாக இருக்கும். அதுகுறித்து விரிவாக இங்கே படியுங்கள்.

பேங்க் போகமால், அக்கவுண்ட் ஒபன் பண்ணனுமா? அப்போது இது உங்களுக்குதான்!

author img

By

Published : Jul 29, 2020, 5:18 AM IST

கடந்த ஜனவரி மாதம் இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில், காணொலி மூலம் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதை அங்கீகரித்தது. அதன் தேவை அப்போது புரியாவிட்டாலும், கரோனா தொற்று அதனைப் புரியவைத்திருக்கிறது.

கரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. அதிலும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் வங்கிக்குச் சென்று சமூக இடைவெளியைப் பின்பற்றி வங்கி கணக்கு தொடங்குவது என்பது சாத்தியமில்லாத ஒன்று.

காணொலி மூலம் எப்படி வங்கி கணக்கைத் தொடங்குவது திறப்பது என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

வாடிக்கையாளரைப் பற்றி தெரிந்துகொள்வது (KYC) என்றால் என்ன?

காணொலி வாயிலாக வாடிக்கையாளரைப் பற்றி தெரிந்துகொள்வது என்பது ஒன்றுமில்லை, காணொலிக் காட்சி மூலம் வாடிக்கையாளரைத் தொடர்புகொண்டு, அவரின் ஆதார், பான் விவரங்கள் ஆகிய தகவல்களைப் பெறுதலே ஆகும். மேலும், வாடிக்கையாளரின் புகைப்படத்தையும் பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வங்கிக்கு நேரடியாகச் செல்வது தவிர்க்கப்படும்.

இந்த முறை எப்போது வந்தது?

இந்த முறை இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் முன்னாள் தலைவர் யு.கே. சின்ஹா தலைமையில் நடைபெற்ற சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான நிபுணர் குழுவுடன் கலந்துரையாடலில் முன்மொழியப்பட்டுள்ளது. இ-கேஒய்சி (E-KYC) மூலம் மக்களால், வங்கியின் தேவைகளை சரியாகப் பூர்த்திசெய்ய முடியவில்லை. அதனால் காணொலி மூலம் வாடிக்கையாளரும், வங்கி ஊழியரும் சந்தித்துக்கொண்டால் அனைத்துத் தகவல்களும் அவர்களால் சரியாகக் கொடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

எந்தெந்த வங்கிகள் வீடியோ கேஒய்சி சேவையை வழங்குகின்றன?

கடந்த மாதம் முதல் ஐசிஐசிஐ வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி, யெஸ் வங்கி, ஐடிஎஃப்சி வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி ஆகிய முதன்மை வங்கிகள் இந்தச் சேவையை வழங்குகின்றன. இதுதவிர, பேடிஎம் போன்ற டிஜிட்டல் தளங்களில் இச்சேவை அளிக்கப்படுகிறது.

எப்படி இந்த முறை செயல்படுத்தப்படுகிறது?

  • முதலில் வங்கியின் இணையத்தளத்தில் அல்லது செயலியில் வாடிக்கையாளர்கள் கேஒய்சி குறித்து பதிவுசெய்ய வேண்டும்.
  • குறிப்பிட்ட தேதியில் வங்கி ஊழியர் வாடிக்கையாளரை அழைத்துப் பேசுவார்.
  • அப்போது வாடிக்கையாளரால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள், அடையாள அட்டைகள் சரிபார்க்கப்படும்.
  • பின்னர் பான் கார்டை பெற்று, வாடிக்கையாளரின் புகைப்படத்தைப் பதிவிறக்கம் செய்யப்படும்.
  • அதுமட்டுமின்றி இணையம் மூலம் வாடிக்கையாளரின் உண்மையான இருப்பிடமும் கண்டறியப்படும்.
  • பின்னர் வாடிக்கையாளரை வங்கி ஊழியர் விசாரிப்பார்.
  • இந்தல் காணொலி உரையாடல் முடிந்தவுடன் வாடிக்கையாளரின் கோரிக்கையைப் பரிசீலிப்பதா, வேண்டாமா என்பது குறித்து வங்கி ஊழியர் பதிலளிப்பார்.
  • அனைத்தும் முடிந்த பிறகு எட்டு மணி நேரத்தில் இந்த உரையாடலுக்கான இறுதி பதில் வாடிக்கையாளருக்கு தெரியவரும்.

இதில் நினைவில்கொள்ள வேண்டியவை என்னென்ன?

இந்தச் சேவைக்கான காணொலி வங்கியின் செயலி அல்லது வலைதளம் மூலம் தான் நிகழும். மற்ற காணொலிச் செயலிகள் மூலம் நடைபெறாது. இதனை வங்கி ஊழியர்தான் தீர்மானிப்பார். இதில் மூன்றாவதாக ஒருவருக்கு வேலையில்லை. மேலும், மோசமான இணைய இணைப்பு காரணமாக கேஒய்சி செயல்முறை தடைபட்டால், செயல்முறையை மீண்டும் தொடங்க வேண்டும்.

இதையும் படிங்க...அடுத்த 4 ஆண்டுகளில் ஆட்டோமொபைல் துறை மீளுமா? ஃபாடா துணைத் தலைவர் பேட்டி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.