ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் உள்ள 7 இடங்களில் அமலாக்கத்துறை அலுவலர்கள் புதன்கிழமை (நவ.11) சோதனை நடத்தினார்கள்.
இந்தச் சோதனை காந்தி நகரில் உள்ள பிரபல தொழிலதிபர் ராஜ் குமார் குப்தா -வுக்கு சொந்தமான இடங்களிலும் நடந்தது. அப்போது சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.
இதேபோல் தொழில்துறை வளர்ச்சி மையத்தில் உள்ள ஜீலம் இண்டஸ்ட்ரீஸ் சம்பா, கார்த்தோலி சரோரில் உள்ள ஆலைகள், சஞ்சய் குப்தா சி.ஏ. வி.கே சூரி நிறுவனம், ஜம்மு காஸ்டிங் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களிலும் சோதனை நடக்கிறது.
தொழிலதிபர் ராஜ் குமார் குப்தா -வுக்கு பேங்க் ஆஃப் பரோடாவில் மூன்று கடன்கள் (லோன்) உள்ளன.
இந்தக் கடன்களை அவர் திருப்பி செலுத்தவில்லை. இந்நிலையில் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: வட்டாட்சியரின் வாகனத்தை மறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை!