நாட்டின் தொழில்துறை உற்பத்தி குறியீடு (Index of Industrial Production) புள்ளி விவரத்தை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டின் தொழில்துறை உற்பத்தியானது ஜூலை மாதத்தில் 10.4 விழுக்காடு சரிவைக் கண்டுள்ளது. குறிப்பாக, உற்பத்தித்துறையில் 11.1 விழுக்காடும், சுரங்கத்துறையில் 13 விழுக்காடும், மின்சார உற்பத்தி துறையில் 2.5 விழுக்காடும் சரிவைச் சந்தித்துள்ளன.
கோவிட்-19 பரவல் லாக்டவுனை நாடு முழுவதும் அரசு அறிவித்த நிலையில், உற்பத்தி துறை மார்ச் மாத இறுதியில் முற்றிலும் முடங்கியது. இதன் காரணமாக, ஏற்பட்ட சுணக்கத்தின் தாக்கமே மேற்கண்ட துறைகளில் பிரதிபலித்துள்ளதாக புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. அதேவேளை கடந்த ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களை ஒப்பிடும்போது ஜூலை மாதம் முன்னேற்றத்தை கண்டுள்ளது.
இதையும் படிங்க: சமூக சீர்திருத்தவாதி ஸ்வாமி அக்னிவேஷ் காலமானார்!