2020ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில், உற்பத்தி துறை 55.3 சதவிகிதமாகவும், பிப்ரவரி மாதம் 54.5 சதவிகிதமாகவும் உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் எட்டு ஆண்டுகள் கண்டிடாத உயர்வை ஜனவரி மாதத்தில் எட்டியுள்ளோம். இந்தியாவைப் பொறுத்தவரை நாளுக்கு நாள் உற்பத்தி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வெளிநாடுகளிலிருந்து அதிக ஆர்டர்கள் வருவதால், உற்பத்தி இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் என உற்பத்தித் துறை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
என்னதான் உயர்வைக் கண்டாலும், கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உற்பத்தித் துறைக்கு எச்சரிப்பு மணி ஒன்று அடித்துள்ளது. அது தான் ஏற்றுமதி.
அதாவது பொருளாதாரத்தில் மிகப்பெரிய நாடான சீன கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சிக்கித்தவிக்கிறது. கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் பல நாடுகளில் ஏற்றுமதி தடைசெய்யப்பட்டுள்ளது.
அதனால் உற்பத்தியை ஏற்றுமதி செய்வதில் சிக்கலால் உள்ளன என எதிர்பார்க்கப்படுகிறது. என்னதான் அதிகமாக உற்பத்திச் செய்தாலும், அதனை ஏற்றுமதி செய்தால் மட்டுமே பலன்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.7 விழுக்காடாக உள்ள நிலையில்,உற்பத்தி அதிகரித்து ஏற்றுமதி செய்தால் இந்தியப் பொருளாதாரம் விரைவில் மேம்படும்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து உற்பத்தித் துறை மேம்படுமா என்ற கேள்வி, பொருளாதார நிபுணர்கள் மத்தியில் நிலவிவருகிறது.
இதையும் படிங்க: மஹிந்திரா, மாருதி விற்பனை வீழ்ச்சி!