ரிசர்வ் வங்கி 2020-21 நிதியாண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி எதிர்மறையான இருக்கக்கூடும் என்று கூறிய சில நாட்களுக்குப் பிறகு, இந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கும் என்று கிரிசில் கணித்துள்ளது..
ஒரு அறிக்கையில், வேளாண்மை அல்லாத மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் சுருங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், வேளாண்மை 2.5 சதவீதமாக வளர்வதன் மூலம் இந்திய பொருளாதாரம் மேம்படும் என தெரிவித்துள்ளது..
கடந்த 69 ஆண்டுகளில், 1958, 1966 மற்றும் 1980 நிதியாண்டுகளில் மட்டுமே இந்திய பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்தது. பொருளாதாரம் சரிவை சந்தித்ததற்கு காரணம் விவசாயத்தைத் தாக்கிய பருவமழையே முக்கிய காரணம்.
ஆகையால் இந்திய பொருளாதாரம் இந்த நிதி ஆண்டில் விரைவில் மேம்படும் என கிரீசில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: முகக் கவசம் அணியாதவர்களுக்கு அறிவுரை வழங்கிய இபிஎஸ்! துண்டை எடுத்து கட்டிக்கோங்க!!!