ETV Bharat / business

இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிப்பு!

author img

By

Published : Oct 21, 2020, 6:36 PM IST

டெல்லி: இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு மேற்கொள்ளப்படும் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்துவருவதாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி
ஏற்றுமதி

இந்தியாவின் ஏற்றுமதிகளை அதிகரிக்க மத்திய அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. சுயசார்பு கொள்கைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என பிரதமர் மோடியும் சுதந்திர தின உரையின்போது தெரிவித்திருந்தார்.

அப்போது, பாதுகாப்பு, வேளாண், விண்வெளி உள்ளிட்ட துறைகள் சார்ந்த பாகங்களை தயாரிக்க உள்நாட்டு நிறுவனங்கள் ஊக்கவிக்கப்படும் என மோடி தெரிவித்திருந்தார். இதற்காக, பாதுகாப்பு கொள்முதல் விதிகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்க, சீன நாடுகளுக்கு மேற்கொள்ளப்படும் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்துவருவதாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அங்கிருந்து இறக்குமதி செய்வது வெகுவாக குறைந்துள்ளது. இந்தாண்டு, செப்டம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் 5.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பொருள்கள் ஏற்றமதி செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட, 15.5 விழுக்காடு அதிகமாகும்.

அமெரிக்காவுடனான இறக்குமதி 34.3 விழுக்காடு குறைந்துள்ளது. இந்தாண்டு, செப்டம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் 1.8 பில்லியன் மதிப்பிலான பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, இது 2.8 பில்லியின் டாலர்களாக இருந்தது. துறைகள் கடந்து பல்வேறு பொருள்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

கடந்தாண்டு, ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில், 36.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டது.

இந்தாண்டு, 24.5 விழுக்காடு குறைந்து 27.4 அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அதேபோல், இங்கிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது கடந்தாண்டை விட இந்தாண்டு 26.3 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: 2025க்குள் 85 கோடி மனிதர்களின் வேலைகளை பறிக்கும் இயந்திரங்கள்: ஆய்வில் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.