இந்தியாபுல்ஸ்(IndiaBulls) நிறுவனம் 2000ஆம் தொடங்கப்பட்டது. குர்கானை தலைமையிடமாக கொண்ட இந்நிறுவனம் நிதி சேவை, ரியல் எஸ்டேட் போன்ற சேவைகள் அளித்து வந்த நிலையில், நடப்பு மாத துவக்கத்தில் சட்டவிரோதமாக நிதியை பயன்படுத்தியதற்காக இந்நிறுவனத்தின் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாபுல்ஸ் குழுமம் பங்கு சந்தையில் சரிவை சந்தித்தது. மேலும் இந்தியாபுல்ஸ் ரியல் எஸ்டேட்(IndiaBulls Real Estate) 10 விழுக்காடு, இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட்(IndiaBulls housing Finance Limited) 6.4 விழுக்காடு அளவிற்கு சரிவை சந்தித்துள்ளது. மேலும் அதிகபட்சமாக 16 விழுக்காடு வீழ்ச்சியை இந்தியாபுல்ஸ் வேண்டுரெஸ் லிமிடெட்(IndiaBulls Ventures Limited) சந்தித்துள்ளது.
அடுத்த வார பங்கு சந்தை தொடக்கத்தில் மேலும் இந்தியா புல்ஸ் பங்குகள் சரிவை சந்திக்கும் சூழல் இருப்பதால், இந்தியாபுல்ஸ் முதலீட்டார்கள் கலக்கத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: அடுத்தடுத்து வேலை நாள்களை குறைக்கும் சரக்கு வாகன உற்பத்தி நிறுவனங்கள்