ETV Bharat / business

வர்த்தகத்தை மேம்படுத்த புதிய யுக்திக்குத் தயாராகும் இந்தியா-சீனா!

author img

By

Published : Oct 13, 2019, 1:57 PM IST

டெல்லி: வர்த்தகத்தை மேம்படுத்தும் விதமாக இந்தியாவும்- சீனாவும் புதிய யுக்திகளை கையாள உள்ளது.

India China

தலைவர்கள் சந்திப்பு:
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு, மாமல்லபுரம் கடற்கரையில் நடந்தது. அப்போது இருநாட்டுத் தலைவர்களும் வர்த்தகத்தில் புதிய யுக்தியை புகுத்துதல் குறித்து விவாதித்துள்ளனர். இந்த தகவலை இந்திய வெளியுறவுச் செயலர் விஜய் கோகலேவும் தெரிவித்து இருந்தார். மேலும் நரேந்திர மோடி, அடுத்த ஆண்டு (2020) சீனா செல்கிறார் என்ற தகவலையும் அவர் உறுதிபடுத்தினார்.

நட்புறவு:
இந்தச் சந்திப்பு குறித்து செய்தி வெளியிட்ட சீன ஊடகங்களும் இந்தத் தகவலை கூறியுள்ளது. ஜி ஜின்பிங், நரேந்திர மோடி சந்திப்பு வர்த்தக தொடர்பு மற்றும் இரு நாட்டு மக்கள் இடையேயான கலாசாரத் தொடர்பை அதிகரிக்கும் என அந்நாட்டு ஊடகங்களும் செய்தி தெரிவித்துள்ளன.
இந்தியாவும், சீனாவும் நெருக்கம் காட்ட அரசியல் காரணங்களும் உள்ளன. ஏனெனில் பாகிஸ்தான் சீனாவுடன் அதீத நட்பு பாராட்டி வருகிறது.

விரிசல்:
ஆனால், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது. வர்த்தகம் மட்டுமின்றி இரு தரப்பு நட்புறவிலும் அந்த இடைவெளி தொடர்கிறது. தீர்க்கப்படாத எல்லைப் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகம் எந்தவொரு வளர்ச்சியும் இல்லாமல் மந்தநிலையில் தொடர்கிறது.

புதுப்பிப்பு:
2017ஆம் ஆண்டு டோக்லாம் பகுதியில் 73 நாட்கள் இந்திய-சீனப் படைகள் மோதிக்கொண்டன. இதையடுத்து 1962ஆம் ஆண்டைப் போல், சீன, இந்தியா போர் நடைபெறலாம் எனவும் சிலர் ஆரூடம் செய்தனர்.
இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பால் ஒரு விஷயத்தை உறுதியாகக் கூற முடியும். இருவரும், பொருளாதாரத்தை முன்னெடுப்பதில் உறுதியாக உள்ளனர். சீனாவின் 70ஆம் ஆண்டுகள் மக்கள் குடியரசைப் போற்றும் விதமாக கலாசார நிகழ்ச்சிக்கு இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்புக் கொண்டிருப்பது நட்புறவு புதுப்பிப்பாக பார்க்கப்படுகிறது.

வெற்றி:
மேலும் தலைவர்கள் சந்திப்பின் போது ஜம்மு-காஷ்மீர் விவகாரம் பேசப்படவில்லை. ஆக இந்தியாவுக்கு கிடைத்த ராஜாங்க ரீதியிலான வெற்றி இது எனக்கருதப்படுகிறது. இவைகள் எல்லாம், இரு தலைமைகளும் உறவை வலுப்படுத்தத் தயாராகி விட்டன என்பதை இது தெளிவாக வெளிப்படுத்துகிறது.

இதையும் படிக்கலாமே

12 ஆண்டுகளாக பணக்காரப் பட்டியலில் இடம்பிடித்த முகேஷ் அம்பானி!

Intro:Body:

india china trade relationship 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.