அபுதாபி : இந்தியாவுக்கான விமான சேவை தடையை ஜூலை 21ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அபுதாபியை தலைமையிடமாகக் கொண்ட எதிஹாட் விமான நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியிலிருந்து எதிஹாட் விமான நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இந்நிலையில், எதிஹாட் விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பயணி ஒருவர் இந்தியாவுக்கான விமான சேவை தொடங்குமா? எனக் கேள்வியெழுப்பியிருந்தார்.
இதற்கு எதிஹாட் விமான நிறுவனம் சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. அந்தப் பதிலில், “தடை நீக்கப்படவில்லை, மாறாக ஜூலை 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இதை நாங்கள் உறுதியாக கூறமுடியும். அதுவரை இந்தியா, வங்க தேசத்துக்கு விமான சேவைகள் தடை விதிக்கப்படுகின்றன” என்று தெரிவித்துள்ளது.
எனினும், இந்தியாவுக்கான சரக்கு விமான சேவை வருகிற (ஜூலை) 7ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவிட் இரண்டாம் அலை காரணமாக, இந்தியாவிலிருந்து ஏப்ரல் 24ஆம் தேதி முதல் துபாய்க்கு பயணிகள் விமானங்கள் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள துபாய்