பங்குச்சந்தையில் ஐசிஐசியின் ஆதிக்கம்
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ மும்பையை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது. மும்பை பங்குச்சந்தையில் அதிக பங்குகளைக் கொண்ட ஐசிஐசிஐ, 2019ஆம் ஆண்டு Q3 எனப்படும் மூன்றாம் காலாண்டான அக்டோபர்- டிசம்பர் முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி,
- 2018-2019ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு முடிவில் 1,604.91 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது.
- 2019-2020ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் இந்த நிகர லாபம் 4,146.46 கோடி ரூபாயாக உள்ளது.
அதிகளவு வர்த்தகமாக வாய்ப்பு
மேலும் 2018-19ஆம் நிதியாண்டில் 33,433.31 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம், 2019-20ஆம் நிதியாண்டில் 38,370.95 ரூபாயாக அதிகரித்துள்ளது.
வங்கியின் லாபம் இரண்டு மடங்கு உயர்ந்ததால், பங்குச்சந்தையில் ஐசிஐசிஐ வங்கி பங்குகள் அதிகளவு வர்த்தகமாக வாய்ப்புள்ளதாக பங்குத் தரகர்கள் தெரிவிக்கின்றனர்.
ஐசிஐசிஐ முதன்மைநிலை
மேலும், கடந்த சில வாரங்களாகவே மும்பை பங்குச்சந்தையில் சிறப்பாகச் செயல்பட்ட பங்குகளில் ஐசிஐசிஐ வங்கி பங்குகள் முதன்மை நிலைகளில் இடம்பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Tata Altroz டாடா அல்ட்ரோஸ்: இந்தியர்களைப் பாதுகாக்க களமிறங்கிய இந்தியத் தயாரிப்பு!