உலக அளவில் மிகவும் பிரபலமான சமூக வலைதளம் ஃபேஸ்புக். இதன் நிறுவனரான மார்க் ஜூக்கர்பெர்க், தனது கல்லூரி படிப்பை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் போதே கல்லூரியிலிருந்து வெளியேறியவர்.
இவர் தனது 19 வயதில், சிலிக்கன் பள்ளத்தாக்கு பகுதியில் ஃபேஸ்புக் நிறுவனத்தை தொடங்கினார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மார்க் ஜூக்கர்பெர்க், "நான் இப்போது புதிய நிறுவனம் தொடங்கினால் கண்டிப்பாக அது சிலிக்கன் பள்ளத்தாக்கு பகுதியில் இருக்காது.
முதன்முதலில் ஃபேஸ்புக் தொடங்கப்பட்டபோது முதலீடுகளை பெற சிலிக்கன் பள்ளத்தாக்கு பகுதிக்கு சென்றேன். அப்போது எனக்கு வயது வெறும் 19. அப்போது புதிதாக ஒரு நிறுவனம் தொடங்குவது குறித்து, அப்போது எனக்கு பெரிதாக எதுவும் தெரியாது" என்றார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள சிலிக்கன் பள்ளத்தாக்கு பகுதியில்தான் கூகுள், ஆப்பிள் போன்ற சர்வதேச தொழிட்நுட்ப நிறுவனங்களின் தலைமையிடம் உள்ளது.
மேலும், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எனப்படும் புதிய முயற்சி தொழில் நிறுவனங்களும் பெரும்பாலும் இப்பகுதியிலேயே இருக்கும்.
இதையும் படிங்க: கொரோனா வைரஸ்: சீனாவுக்கு வெளியே முதல் உயிரிழப்பு!