ETV Bharat / business

இந்தியாவில்  ஹூண்டாயின் 'என் லைன்' மாடல் அறிமுகம்

ஹூண்டாய் நிறுவனத்தின் என் லைன் பெர்பார்மன்ஸ் மாடல் இந்தியாவில் இன்று(ஆகஸ்ட். 9) இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

author img

By

Published : Aug 9, 2021, 2:25 PM IST

hyundai
hyundai

டெல்லி: தென்கொரிய நான்கு வாகன தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் தனது என் லைன் பெர்பார்மன்ஸ் மாடலை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. இதனை ஹூண்டாய் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் எஸ்.எஸ். கிம் அறிமுகப்படுத்தினார்.

இதுகுறித்து கிம், "ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. என் லைன் மாடலை தொடர்ந்து, அடுத்த சில ஆண்டுகளில் இந்திய வாடிக்கையாளர்களுக்காகக் கூடுதல் மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளோம்.

என் லைன் மாடல் வாகனங்களில் மூன்று வேரியண்ட்டுகள் உள்ளன. இதன் ஸ்டைலான வடிவமைப்பு ஈர்க்கக்கூடிய வகையில் இருக்கும். ஏற்கனவே இவ்வகை கார்கள் தென் கொரியா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.

என் லைன் பெர்பார்மன்ஸ் மாடல் கார்கள் ஐ20, ஐ30 மாடலை போலவே இருக்கும். ஐ30, ஐ20 கார்களின் வடிவமைப்புகளில் பல மாறுதல்கள் கொண்டு, என் லைன் மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் ஆர்ப்பரிக்கும் கார் விற்பனை... சலுகைகளை வாரி வழங்கும் முன்னணி நிறுவனங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.