லாக் டவுன் காரணமாக இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் முடங்கியுள்ள நிலையில், அதை மீண்டும் விரைவாகத் தொடங்க மத்திய உள்துறை அமைச்சகம், தொழிற்துறை அமைச்சகத்துடன் காணொளி கட்சி மூலம் ஆலோசனை நடத்தியது.
உள்துறை அமைச்சகச் செயலாளர் புன்யா சாலிலா ஸ்ரீவத்சாவு தலைமையில் நடைபெற்ற, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சக மூத்த அலுவலர்கள், தொழில் துறை கூட்டமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கரோனா பாதிப்புக் குறைவான பகுதிகளில் தொழில் துறை இயக்கங்களை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தொழில் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்குத் தக்க பாதுகாப்பு உபகரணங்கள், சமூக இடைவெளி ஆகியவற்றை உறுதிபடுத்தவேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கான அனைத்து உதவிகளும் மத்திய அரசு சார்பில் செய்து கொடுக்கப்படும் எனவும் தொழில்துறை கூட்டமைப்புக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. மே 3ஆம் தேதிக்குப்பின் மத்திய அரசு மேற்பார்வையில், அந்தந்த மாநில அரசின் வழிகாட்டுதலுக்கிணங்க தொழில் துறையினர் செயல்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சீனாவைத் தொடர்ந்து தரவுகளை மாற்றும் அமெரிக்கா!