நாட்டின் முன்னணி தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி வங்கி தற்போது புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தையான பி.எஸ்.சி. சென்செக்ஸில் இந்த வங்கியின் மொத்த சந்தையின் மதிப்பு ரூ.8.05 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
இதையடுத்து எட்டு லட்சம் கோடி ரூபாய் மதிப்பை கடந்த, நாட்டின் முதல் வங்கி என்ற பெருமையை இந்த வங்கி பெற்றுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் இந்த வங்கியின் பங்குகள் சுமார் 15 விழுக்காடு உயர்வைச் சந்தித்துள்ளது.
சுமார் 13.30 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடன் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நாட்டின் அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாகத் திகழ்கிறது. இரண்டாமிடத்தில் ரூ.10.13 லட்சம் கோடி மதிப்புடன் டி.சி.எஸ். நிறுவனம் உள்ளது. ஹெச்.டி.எஃப்.சி மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒரே வாரத்தில் லட்சுமி விலாஸ் வங்கியின் பங்குகள் 50 விழுக்காட்டுக்கு மேல் சரிவு!