டெல்லியில் அகில இந்திய வணிகர் சம்மேளம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய நிர்மலா சீதாராமன், நாட்டின் வணிக செயல்பாடுகளை ஊக்குவிக்க அனைத்து தரப்பிலிருந்தும் யோசனைகள் கேட்கப்பட்டுவருகிறது என்றார்.
சரக்கு மற்றும் சேவை வரி தாக்கலை எளிமைபடுத்த சிறுகுறு வணிகர்களிடம் கருத்து கேட்கப்பட்டு அவை பரிசீலிக்கப்பட்டுவருவதாக கூறிய நிர்மலா சீதாராமன், சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பில் முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்படும் எனத் தெரிவித்தார்.
கணினி மாயமாக்கப்பட்ட முறையில் வரி ஆணையம் ஜி.எஸ்.டி தொடர்பான கணக்குகள் வரைமுறைபடுத்தப்படுவதாகவும், இது நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்தும் எனவும் குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதார மந்தநிலையை சீர்செய்யும் விதமாக நாடுமுழுவதும் அரசு சார்பில் வணிக விழாக்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறிய நிர்மலா சீதாராமன், வரும் மார்ச் மாதம் முதல் நான்கு பெரு நகரங்களில் இந்த விழாகள் நடத்தப்படும் என்றார்.
இதையும் படிங்க: வைரலாகும் தர்பாரின் புதிய மோஷன் போஸ்டர்