முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஈடிவி பாரத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அந்த நேர்காணலின் சில பகுதிகள் இங்கே:
ஊரடங்கு நாடு முழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அவல நிலையை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
கரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு அறிவித்துள்ள இந்த ஊரடங்கால் ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பல சிரமங்களை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு கால்நடையாக பயணம் மேற்கொள்கின்றனர். இது தொடர்பான புகைப்படம், காணொலிகளை சமூக வலைதளங்களில் பார்க்கும்போது இதயம் மிகவும் வலிக்கிறது. மேலும் அரசாங்கம் அவர்களுக்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என்பதை காட்டுகிறது. எனவே இனியாவது அவர்கள் வீட்டுக்கு செல்ல அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வெளியேற்றுவதற்காக ராணுவம் நிறுத்தப்பட வேண்டும் என்று நீங்கள் கோருகிறீர்கள். ஷ்ராமிக் ரயில்கள் போதாது என்று நினைக்கிறீர்களா?
சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்தோரின் போக்குவரத்துக்கு நியமிக்கப்பட்ட ஷ்ராமிக் ரயில்கள் போதாது. எந்தவொரு அரசாங்கமும் எந்தவொரு அறிவுறுத்தலையும் வெளியிடவில்லை அல்லது அதற்கான எந்த உறுதியையும் காட்டவில்லை. அரசு விரும்பினால், தொழிலாளர்களை 24 மணி நேரத்திற்குள் தங்கள் வீடுகளுக்கு அனுப்பலாம்.
மத்திய அரசு அறிவித்த மெகா பொருளாதார தொகுப்பு விவசாயிகளுக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் நேரடியாக பயனளிக்காது என விமர்சிக்கப்பட்டுள்ளது. முன்னாள் நிதியமைச்சராக இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பொருளாதார தொகுப்பு குறித்து நான் எதுவும் கூற விரும்பவில்லை. இன்று இரண்டு தொழிலாளர்கள் தங்கள் சாமான்களுடன் நடந்து செல்வதைக் கண்டேன். இந்தத் தொகுப்பு பற்றி நான் அவர்களிடம் கேட்டபோது, அவர்கள் மௌனம் காத்தார்கள். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் யாரும் பயனடையவில்லை
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மாநில அரசுகள் உதவவில்லை, போலீசார்கூட அவர்களுடன் ஒத்துழைக்கவில்லை. இது குறித்து உங்கள் கருத்து?
பழிவாங்குவதிற்கு நேரம் இதுவல்ல. இது தொடர்பாக போதுமான நடவடிக்கைகளை எடுப்பது மாநில மற்றும் மத்திய அரசின் கூட்டுப் பொறுப்பாகும். இருப்பினும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவவும் அவர்களை வீட்டிற்கு திருப்பி அனுப்பவும் ராணுவ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது.
நீங்கள் ஜார்க்கண்டிலிருந்து வந்தவர். பீகார் மற்றும் ஜார்க்கண்ட் ஒரே சூழ்நிலையில் உள்ளன. இது குறித்து உங்கள் பார்வை என்ன?
புலம்பெயர்ந்தோர் தங்கள் சொந்த ஊரை நோக்கி செல்கின்றனர். எனவே அவர்களுக்கு அங்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். எம்.என்.ஆர்.இ.ஜி.ஏ திட்டத்தின் கீழ் ஒதுக்கீட்டை அதிகரிக்க நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடவடிக்கை எடுத்துள்ளதில் நான் திருப்தி அடைகிறேன்.
இதையும் படிங்க: 'கரோனா பரிசோதனை தொடர்பான புதிய நெறிமுறைகள் வெளியீடு' - ஐ.சி.எம்.ஆர்