கோவிட்-19 தாக்கத்தின் காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக மத்திய நிதியமைச்சகம் பல்வேறு சலுகைகளை அறிவித்தது. அதன்படி, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்து உத்தரவிட்டது.
தனிநபர் வருமான வரி அறிக்கை தாக்கலுக்கான காலக்கெடு ஜனவரி 10ஆம் தேதி வரையிலும் நிறுவனங்களுக்கான காலக்கெடு பிப்ரவரி 15ஆம் வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதை மேலும் நீட்டிக்க வேண்டும் என குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதற்கு பதிலளித்த நிதியமைச்சகம் ஏற்கனவே மூன்று முறை கால நீட்டிப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில், மேலும் நீட்டிப்பு என்பதற்கான சாத்தியமே இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: நிரந்தர வைப்புநிதித் திட்டத்தில் முக்கிய மாற்றம் -ஆக்சிஸ் வங்கி