ETV Bharat / business

ஆன்லைன் வணிகத்திற்கு அளிக்கப்பட்ட விலக்கை தளர்த்திய மத்திய அரசு! - கரோனா வைரஸ்

மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை மட்டுமே விற்பனை செய்ய ஆன்லைன் வணிக நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை, தவறாக பயன்படுத்தியதால் மத்திய அரசு அந்த விலக்கை தளர்த்தியுள்ளது.

govt-make-a-u-turn-stops-sale-of-non-essential-items-through-e-commerce-platforms

author img

By

Published : Apr 19, 2020, 4:38 PM IST

இந்தியாவில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவின்போது மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்க சில நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் சில ஆன்லைன் நிறுவனங்களும் அடங்கும்.

இதுகுறித்து மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா விடுத்துள்ள அறிக்கையில், ''மக்களின் அத்தியாவசியத் தேவையை நிவர்த்தி செய்வதற்காக சில ஆன்லைன் நிறுவனங்கள் செயல்பட அனுமதித்தோம். ஆனால் அந்த அனுமதியை பயன்படுத்தி தற்போது மொபைல், ஃபிரிட்ஜ், ஆடைகள் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

மத்திய அரசு விதித்த கட்டுப்பாடுகளை மீறி செயலப்பட்டதால், வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுகிறது'' என்றார். மேலும் நாளை முதல் சில சிறு, குறு நிறுவனங்கள் செயல்பட மத்திய அரசு அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அத்தியாவசியப் பொருள்களை டெலிவரி செய்ய களத்திலிறங்கும் ஸ்விகி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.