மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு மானியங்கள், சலுகைகள் வழங்கப்பட்டன. சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கும் வகையிலும் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் கட்டுக்குள் வைக்கவும் இந்த மாற்றுத் திட்டத்தை ஊக்குவிக்க அரசு முடிவெடுத்துள்ளது.
இது மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் அரவிந்த சாவந்த் 2020ஆம் ஆண்டுக்கான திட்ட வரைவைத் தெரிவித்தார். என்.இ.எம்.எம்.பி என்ற திட்டத்தின் கீழ் வரும் 2020ஆம் ஆண்டுக்குள், சுமார் 60-70 லட்சம் மின்சார வாகனங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.
இதற்கான உற்பத்தித் திறன், உட்கட்டமைப்பு வசதியானது பேம் இந்தியா திட்டத்தின் போது ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இந்த இலக்கை அரசு நிச்சயம் எட்டும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.