ETV Bharat / business

சரிபாதியாக குறைந்த தங்கத்தின் இறக்குமதி!

டெல்லி: இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவு 47.42 விழுக்காடு குறைந்து 9.28 பில்லியன் டாலராக (இந்திய மதிப்பில் சுமார் 68.5 ஆயிரம் கோடி) உள்ளது.

author img

By

Published : Nov 15, 2020, 3:38 PM IST

Gold imports
Gold imports

சர்வதேச அளவில் தங்கத்தை அதிகம் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. தங்கத்தின் மீது இந்தியர்களுக்கு உள்ள மோகத்தை பூர்த்தி செய்ய ஆண்டுதோறும் சுமார் 800 முதல் 900 டன் வரையிலான தங்கம் இங்கு இறக்குமதி செய்யப்படுகிறது.

இருப்பினும், இந்தாண்டு கரோனா காரணமாக இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவு பெரியளவில் குறைந்துள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் 47.42 விழுக்காடு குறைந்து 9.28 பில்லியன் டாலராக (இந்திய மதிப்பில் சுமார் 68.5 ஆயிரம் கோடி) உள்ளது.

கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 17.64 பில்லியன் அமெரிக்க டாலர்(இந்திய மதிப்பில் 1.31 லட்சம் கோடி) மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல இந்தாண்டு வெள்ளியின் இறக்குமதியும் 64.65 விழுக்காடு குறைந்து 742 மில்லியன் டாலராக (இந்திய மதிப்பில் 5.5 ஆயிரம் கோடி) உள்ளது.

தங்கத்தின் இறக்குமதி குறைந்துள்ளதால் இந்தியாவின் வணிக பற்றாக்குறையும் 50 விழுக்காட்டிற்கும் மேல் குறைந்துள்ளது. கடந்தாண்டு 100.67 பில்லியன் டாலராக(இந்திய மதிப்பில் 7.5 லட்சம் கோடி) இருந்த வணிக பற்றாக்குறை இந்தாண்டு 32.16 பில்லியன் அமெரிக்க டாலராக(இந்திய மதிப்பில் 2.39 லட்சம் கோடி) உள்ளது.

அதேபோல, 2020 ஏப்ரல்-அக்டோபர் காலத்தில் ரத்தினங்கள் மற்றும் நகை ஏற்றுமதியும் சுமார் 49.5 விழுக்காடு குறைந்து 11.61 பில்லியன் அமெரிக்க டாலராக( இந்திய மதிப்பில் சுமார் 86 ஆயிரம் கோடி) இருந்தது.

இதையும் படிங்க: வீடு வாங்க போறீங்களா... அப்போ உங்களுக்கு தான் இந்த சலுகை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.