ETV Bharat / business

ரிசர்வ் வங்கி கணிப்பைவிட ஜிடிபி வளர்ச்சி வேகமாக இருக்கும் - சரண் சிங் - சரண் சிங்

டெல்லி: இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் பண்டிகை காலம் உள்ளிட்டவற்றால் தேவை அதிகரித்ததால் ஜிடிபி வளர்ச்சி ரிசர்வ் வங்கியின் கணிப்பைவிட வேகமாக இருக்கும் என்று மூத்த பொருளாதார வல்லுநர் பேராசிரியர் சரண் சிங் தெரிவித்துள்ளார்.

Charan Singh
Charan Singh
author img

By

Published : Dec 4, 2020, 5:47 PM IST

இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதிக் கொள்கைக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவில் ரெப்போ வட்டி விகிதம் எவ்வித மாற்றமுமின்றி நான்கு விழுக்காடாகவே தொடர்ந்து இருக்கும் என்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3.35 விழுக்காடாகவே தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டது.

மேலும், 2020-21ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.5 விழுக்காடு சரிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக, 2020-21 நிதியாண்டில் 9.5 விழுக்காடு வரை இந்தியப் பொருளாதாரம் சரியும் என்று ரிசர்வ் வங்கி கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கரோனா ஊரடங்கு காரணமாக 2020-21ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 23.9 விழுக்காடு சரிவடைந்திருந்தது. அதேநேரம் இரண்டாம் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் எதிர்பார்த்தைவிட நல்ல முறையில் மீண்டது. இரண்டாம் காலாண்டில் வெறும் 7.5 விழுக்காடு மட்டுமே பொருளாதாரம் சரிந்திருந்தது.

இன்று சக்திகாந்த தாஸ் மேலும் கூறுகையில், "இந்த நிதியாண்டில் மூன்றாம் காலாண்டில் நமது பொருளாதாரம் வளர்ச்சி 0.1 விழுக்காடு வளர்ச்சியுடன் நேர்மறைப் பாதைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கிறோம். அதேபோல நான்காம் காலாண்டில் பொருளாதாரம் 0.7 விழுக்காடு வரை வளரும் என்று எதிர்பார்க்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சர்வதேச நிதியத்தின் சுயாதீன மதிப்பீட்டு அலுவலகத்தின் முன்னாள் மூத்த பொருளாதார வல்லுநர் பேராசிரியர் சரண் சிங் கூறுகையில், "இரண்டாம் காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) பெருநிறுவன முடிவுகள் நல்ல வகையில் இருந்தன. அதேபோல, பண்டிகை காலம் என்பதால் தேவையும் அதிகரித்திருந்தது.

இந்தக் காரணங்களால் மூன்றாவது மற்றும் நான்காம் காலாண்டுகளில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி ரிசர்வ் வங்கியின் மதிப்பீடுகளைவிட வேகமாக இருக்கும்.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வளர்ச்சி கணிப்புகள் மிகச் சிறந்தவை. ஆனால் மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டுகளில் (அக்டோபர்-மார்ச் காலம்) ரிசர்வ் வங்கி எதிர்பார்த்ததைவிட வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

இரண்டாம் காலாண்டின் முடிவுகள் சிறப்பாக இருந்ததும், வரும் நாள்களில் பண்டிகை மற்றும் திருமண மாதங்கள் நிறைய உள்ளன என்பதாலேயே வளர்ச்சி வேகமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்" என்றார்.

அடுத்த நிதியாண்டின் (ஏப்ரல்-செப்டம்பர்) முதல் அரையாண்டில் இந்தியாவின் ஜிடிபி கரோனாவுக்கு முந்தைய நிலைக்குச் செல்லும் என்றும் சக்திகாந்த தாஸ் தெரிவித்திருந்தார். அதாவது முதல் அரையாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.5 விழுக்காட்டிலிருந்து 21.9 விழுக்காடாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

சரண் சிங் மேலும் கூறுகையில், "ரெப்போ, ரிவர்ஸ் ரெப்போ விகிதங்கள் எவ்வித மாற்றமுமின்றி இருப்பதும் அதிக பணவீக்கத்திற்கு காரணம்" என்று குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க: ரிசர்வ் வங்கி அறிவிப்பு எதிரொலி - இந்தியப் பங்குச்சந்தை உயர்வு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.