கரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை சீர்செய்யும் விதமாக மத்திய அரசு ரூ.20.97 கோடிக்கான சிறப்பு நிதிச் சலுகையை தற்சார்பு இந்தியா திட்டம் என்ற பெயரில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எதிர்கால அறிவிப்பு தொடர்பாக தனது கருத்தை தெரிவித்தார். இது குறித்து அவர் பேசுகையில், பல்வேறு துறைகளில் உள்ள நிலவரங்களை விரிவாகக் கேட்டுவருகிறோம். இந்த நிதியாண்டு தொடங்கி இரண்டு மாதங்களே கடந்துள்ள நிலையில் அடுத்த பத்து மாதங்களுக்கான திட்டம் உரிய வகையில் செயல்படுத்தப்படும்.
தற்போதைய சூழலை கருத்தில் வைத்த தற்சார்பு இந்தியா திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அடுத்தடுத்த மாதங்களில் கரோனா பாதிப்பு நிலவரத்தில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில்கொண்டு எதிர்காலத் திட்டங்கள் அறிவிக்கப்படும் எனப்படும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரூ.5,000 கோடி கடன்: சீன வங்கிகளுக்கு திருப்பிச் செலுத்த அம்பானிக்கு உத்தரவு