ETV Bharat / business

நிதி பற்றாக்குறையில் தவிக்கும் பொது சுகாதார அமைப்பு: இந்தியா கொரோனாவை சமாளிக்குமா?

author img

By

Published : Mar 13, 2020, 3:07 PM IST

இந்திய சுகாதாரத்தை மேம்படுத்த, பொதுசுகாதாரத் துறைக்கு அதிகமான நிதிகளை ஒதுக்க வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு உள்ளது.

நிதி பற்றாக்குறையில் தவிக்கும் பொது சுகாதார அமைப்பு கொரோனாவை சமாளிக்குமா?

கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அளவில் மிகச்சிறியதான இந்நோய்தொற்றுக் கிருமி மனிதர்களின் உயிரோடு விளையாடுகிறது. சீனா, அமெரிக்கா போன்ற வலிமையான நாடுகள் இந்த வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தது, உலகப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வளர்ச்சியடைந்த நாடுகளே இந்தச் சூழலை சமாளிக்க திண்டாடும் நிலையில், இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதார நிலை கேள்விக்குறியாக உள்ளது.

இந்நிலையில், 130 கோடி மக்கள்தொகை கொண்ட நம் நாட்டின் பொது சுகாதார சூழ்நிலையை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். இந்திய பொதுசுகாதாரம் தாய், குழந்தை இறப்பு விகிதத்தை குறைப்பதில் முன்னேற்றத்தைக் கண்டிருந்தாலும், ஆரோக்கியம் தொடர்பான பல பிரச்சினைகளில் இன்னும் முன்னேறவில்லை. சர்வதேச சுகாதாரத்தரங்களை பூர்த்தி செய்வதில் இந்தியா வெகுவாக பின்தங்கியுள்ளது. ஒவ்வொரு மாநிலங்களிலும் மருத்துவ முறைகள், சேவைகள் கிடைப்பதில் வேறுபாடுகள் உள்ளன.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஆரோக்கியமான மக்கள் தொகை ஒரு பகுதியாகும். அதனால்தான் உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் விழுக்காட்டை பொது சுகாதார அமைப்புகளை உருவாக்க முதலீடு செய்கின்றன. உலக சுகாதார குறியீட்டு கணக்கெடுப்பில் கணக்கெடுக்கப்பட்ட 190 நாடுகளில், இந்தியா 141வது இடத்திலுள்ளது. கோவிட்-19 ஏற்படுத்திய அதிர்வலைகளை அடுத்து, தற்போதுள்ள சுகாதார அமைப்புகளிலுள்ள ஓட்டைகளைப் பற்றி விவாதிக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மறு மதிப்பீடு செய்யவும் அவசியம் ஏற்பட்டுள்ளது.

மத்திய நிதிநிலை அறிக்கையில், சுகாதார 69 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 விழுக்காடாகும். தற்போதைய சுகாதார சவால்களை சமாளிக்க இந்த நிதிகள் போதுமானதாக இல்லை. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 விழுக்காட்டை சுகாதாரத்திற்கு ஒதுக்க வேண்டும் என்று 2011ல் திட்டக் குழு பரிந்துரைத்தது. அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

ஆயுஷ்மான் பாரத் திட்டம்
ஆயுஷ்மான் பாரத் திட்டம்

2018ஆம் ஆண்டில், நாட்டின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காக ஆயுஷ்மான் இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இது உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டம். இது ஏழைக் குடும்பங்களுக்கு 5 லட்சம் காப்பீட்டுத் தொகையாக வழங்குகிறது. பொருளாதார கணக்கெடுப்பின்படி, நாட்டின் மக்கள் தொகையில் 40 விழுக்காட்டை சேர்ந்த சுமார் 10 கோடி ஏழைக் குடும்பங்கள் இந்த திட்டத்திற்கு தகுதியானவர்களாக உள்ளனர். இன்றுவரை, 72 லட்சம் பேர் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். ஆனால் இத்திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நோய்களை மட்டுமே உள்ளடக்கியது.

2022ஆம் ஆண்டுக்குள் 1.5 லட்சம் சுகாதார நிலையங்களை நிறுவ அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது. துரதிஷ்டவசமாக, இந்த இலக்கில் கால் பங்கு கூட எட்டப்படவில்லை. ஆயுஷ்மான் இந்தியாவை அமல்படுத்துவதற்கு, பொறுப்பேற்றுள்ள அமைப்பான தேசிய சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், காப்பீட்டு தொகை தொடர்பான பல்வேறு இடைவெளிகளை சுட்டிக் காட்டியுள்ளது.

அதிக வறுமை மாநிலங்களான பீகார், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகியவை குறைந்த நிதியைப் பயன்படுத்துகின்றன. கேரள மாநிலம் காப்பீடு வழங்குவதில் முன்னணியில் உள்ளது. எங்கு தேவை அதிகமுள்ளதோ, அந்த பகுதிகளில் ஒதுக்கீடு அளவு குறைவாக உள்ளது. இது திட்டத்தின் தோல்வியைக் காட்டுகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின் 115 மாவட்டங்களில், எதுவும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை தேர்வு செய்யவில்லை.

குறிப்பாக, தனியார் மருத்துவமனைகள் இந்த திட்டத்தில் சேர ஆர்வம் காட்டவில்லை. மகாராஷ்டிரா, உத்தரகண்ட் தவிர, மற்ற மாநிலங்களில் வளர்ச்சியடைந்த மாவட்டங்களில் மட்டுமே தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதிகாரபூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஆயிரத்து 456 நபர்களுக்கு 1 மருத்துவர் மட்டுமே இருக்கிறார். உலக சுகாதார அமைப்பு ஆயிரம் பேருக்கும் 1 மருத்துவரை பரிந்துரைக்கிறது.

இந்தியா கொரோனாவை சமாளிக்குமா?
இந்தியா கொரோனாவை சமாளிக்குமா?

இந்த விகிதத்தை மேம்படுத்துவதற்கும், மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், மாவட்ட மருத்துவமனைகளையொட்டி மருத்துவக் கல்லூரிகளை அமைக்கப் போவதாக அரசாங்கம் அறிவித்தது. தற்போது, நாடு முழுவதும் 526 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளில், இந்த கல்லூரிகளில் சேர்வதற்கான இடங்கள் 1,00,000 ஆக உயர்ந்துள்ளது.

அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு இடையிலான இடைவெளி எப்போதுமே அதிகரித்து வருகிறது. நாட்டில் சுமார் 58 விழுக்காடு தனியார் மருத்துவமனைகள் உள்ளன. 81 விழுக்காடு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிகின்றனர். மருத்துவக் கல்வியை அரசாங்க கட்டுப்பாட்டில் இருந்து அகற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தேசிய தேர்வு வாரியத்தின் கீழ் முதுகலை படிப்புகளை வழங்கவும் அரசு விரும்புகிறது.

அரசு நடத்தும் மருத்துவமனைகளில் எம்பிபிஎஸ்க்கு பின் பயிற்சி அளிக்க வசதிகள் பற்றாக்குறை உள்ளன. பயிற்சி பெற்ற மருத்துவர்களின் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. அரசாங்கத்தின் வரி விலக்குகளின் அடிப்படையில், கார்ப்பரேட் மருத்துவமனைகள் சிறந்த மருத்துவ உபகரணங்களை வாங்க முடியும். தனியார் துறையில் உள்ள சில மருத்துவர்கள் வெளிநாடுகளில் சிறப்பு பயிற்சி பெற முடிகிறது.

தேசிய தேர்வு வாரியம் மூலம், கல்லூரிகள் மாணவர்களை முதுகலை மருத்துவ படிப்புகளில் சேர்க்கலாம். இந்த மாணவர்களில் பெரும்பாலோர் பணி மருத்துவர்களாக பணிபுரிகின்றனர். அவர்களுக்கு பெயரளவு மட்டுமே சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன என்பது ஒரு கசப்பான உண்மை. மாவட்ட அளவிலான மருத்துவமனைகளை தனியார் மருத்துவக் கல்லூரிகளுடன் பொது-தனியார் கூட்டுடன் இணைக்க நிதி ஆயோக் முன்மொழிந்தது.

பல தனியார் மருத்துவக் கல்லூரிகளில் போதுமான அளவில் இணைக்கப்பட்ட மருத்துவமனைகள் இல்லை. தனியார் மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் அமைப்பதற்கு மலிவான விலையில் நிலங்களை ஒதுக்குமாறு நிதி ஆயோக் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது. சில மாநிலங்களுக்கு இந்த யோசனை தொடர்பாக கருத்து வேறுபாடுகள் உள்ளன.

தனியார் மருத்துவக் கல்லூரிகள் மாவட்ட மருத்துவமனைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டால், மருத்துவ பணியாளர்களின் பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நாட்டில் மருத்துவ உள்கட்டமைப்பு பற்றாக்குறை உள்ளது. நாட்டில் பொது சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 5 லட்சத்து 38 ஆயிரத்து 305 கோடி தேவைப்படுகிறது. இந்த கோரிக்கையை, சுகாதார அமைச்சகம் 15வது நிதி ஆணையத்தின் முன் வைத்தது. ஆயினும்கூட, இது தொடர்பாக அதிகமான ஒதுக்கீடுகள் எதுவும் இல்லை. அடிப்படை சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

உலகின் ஆரோக்கியமான நாடுகளின் பட்டியலில் இந்தியா 120வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் ஸ்பெயின் முதலிடத்தையும், இத்தாலி இரண்டாவது இடத்தையும் பிடித்தது. சீனாவிற்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் இறப்பு சம்பவங்கள் இத்தாலியில் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. தெற்காசிய நாடுகளில், இலங்கை (66), பங்களாதேஷ் (91), நேபாளம் (110) ஆகியவை இந்தியாவை விட சிறந்த இடத்தில உள்ளன.

இந்தியா கொரோனாவை சமாளிக்குமா?
இந்தியா கொரோனாவை சமாளிக்குமா?

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை நிலவரம்:

கொரோனா வைரஸ் தாக்குதலை தடுப்பதில் நிர்வாக குறைபாடுகள் அதிகம் உள்ளது தெளிவாக தெரிகிறது. வைரஸ் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும் வைராலஜி ஆய்வகங்கள் நாட்டில் போதுமான அளவு இல்லை என்பதும் தெளிவாகியுள்ளது. 1952ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட தேசிய வைராலஜி நிறுவனம், இந்தியாவின் மிகப்பெரிய வைராலஜி ஆய்வகமாகும். உலக சுகாதார அமைப்புடன் இணைந்து வைரஸ்கள் பற்றிய பல அற்புதமான ஆராய்ச்சிகளை இது மேற்கொண்டிருந்தது.

இதுதான் நாட்டில் வைரஸ் தொற்றுநோயால் ஏற்படும் விளைவுகளை தீர்க்க உள்ள ஒரே அமைப்பு. உண்மையில், ஒவ்வொரு மாநிலத்திலும் அத்தகைய அமைப்பை நிறுவ வேண்டிய அவசியம் உள்ளது. அனைத்து மாநிலங்களிலிருந்தும் இரத்த மாதிரிகள் தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பப்படுவதால், வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. இதுபோன்ற ஆய்வகங்கள் வைரஸ்களைக் கண்டறியவும், அதன் மூல காரணத்தை ஆய்வு செய்யவும் உதவும்.

ஒரு தொற்றுநோய்கள் மூலம் பாதிப்பு ஏற்படும் போது மட்டுமே விழித்துக்கொள்ள அரசாங்கம் முடிவு செய்தாலோ, பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதில் அவர்களின் மந்தமான முயற்சிகளைத் தொடர முடிவு செய்தாலோ, கோவிட்-19 போன்ற நெருக்கடிகள் தொடர்ந்து நாட்டை சீர்குலைக்கும்.

பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவை ஏற்கனவே உள்நாட்டு மருந்துத் தொழிலைத் தாக்கியுள்ளன. தற்போதைய சூழ்நிலைகளில், மருந்துத் தொழிலுக்கு பெரிய அளவிலான சலுகைகள், முதலீடுகள் தேவை. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். தற்போது, சீனா பெரும்பான்மையான மூலப்பொருட்களை வழங்கி வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் இந்த இறக்குமதிகளுக்கு சீனாவை நம்புவது நல்லதல்ல. உற்பத்தியை அதிகரிக்க உள்நாட்டு மருந்தியல் துறையை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

பொது சுகாதாரமும் வளர்ச்சியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாகும். எனவே, நெருக்கடி ஏற்படக் காத்திருப்பதற்குப் பதிலாக, நாட்டின் சுகாதாரத் துறை எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ளும் அமைப்புகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை கொள்கை வகுப்பாளர்கள் அங்கீகரிக்க வேண்டும். அண்மையில், தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு அறிக்கையில் மற்ற நாட்டவர்களை விட இந்தியர்கள் தொற்று நோய்களுக்கு ஆளாகிறார்கள் என்று தெரிவித்துள்ளது.

இந்த தொற்று நோய்களில் மலேரியா, வைரஸ் ஹெபடைடிஸ், டெங்கு, சிக்குன்குனியா, அம்மை, மூளைக்காய்ச்சல், டைபாய்டு, யானைக்கால் மற்றும் காசநோய் ஆகியவையும் அடங்கும். இந்த நோய்களுக்கு தீர்வு காண அரசாங்கம் பெரும் நிதி ஒதுக்க வேண்டும். தற்போதுள்ள நோய்களைச் சமாளிக்கவே மிகப்பெரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், கொடிய கோவிட்-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கு இன்னும் எவ்வளவு நிதி தேவைப்படும்? என்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் நோய்வாய்ப்பட்டுள்ள பொதுசுகாதாரத் துறையை வலுப்படுத்த அதிகமான நிதிகளை ஒதுக்க வேண்டிய அவசியத்தை அரசாங்கங்கள் குறைந்தபட்சம் இப்போதாவது உணர வேண்டும்.

இதையும் படிங்க: பயணக்கட்டுப்பாடு குறித்து அறிய 24 மணி நேர அழைப்புதவி சேவை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.