ETV Bharat / business

ஃபோர்டு வாகனங்களின் விலை ஜனவரி முதல் உயர்கிறது

author img

By

Published : Dec 10, 2020, 7:06 PM IST

Updated : Dec 10, 2020, 10:07 PM IST

தனது நிறுவன வாகனங்களின் விலையை 1 முதல் 3 விழுக்காடு வரை உயர்த்த ஃபோர்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Ford India
Ford India

வரும் ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் வாகனங்களின் விலையை உயர்த்த ஃபோர்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் விற்பனை பிரிவு செயல் இயக்குநர் வினய் ராய்னா வெளியிட்டுள்ளார்.

இந்த விலை உயர்வு 1-3 விழுக்காடு வரை இருக்கும் எனவும் மாடலுக்கு தகுந்தார்போல் ரூ.5,000 முதல் ரூ.35,000 வரை விலை உயர்வு இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். உள்ளீட்டு விலை உயர்வு காரணமாக இந்நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, 2020ஆம் ஆண்டுக்கான புக்கிங் செய்தவர்களை இந்த விலை உயர்வு பாதிக்காது எனவும் தெரிவித்துள்ளார். நாட்டின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி கடந்த வாரம் விலை உயர்வை அதிகரித்திருந்தது. இருப்பினும் விலை உயர்வின் அளவு குறித்து மாருதி தரப்பிலிருந்து எந்தவித விவரமும் வெளியாகவில்லை.

இதையும் படிங்க: ஐஆர்சிடிசி நிறுவனத்தின் பங்குகளை விற்கும் மத்திய அரசு

Last Updated : Dec 10, 2020, 10:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.