ETV Bharat / business

இயல்பு நிலைக்கு சென்ற உணவு டெலிவரி சேவை! - ஆன்லைன் உணவு டெலிவரி

டெல்லி: இந்தியாவில் தற்போது ஆன்லைனில் செய்யப்படும் உணவு ஆர்டர், கரோனாவுக்கு முந்தைய நிலையை அடைந்துள்ளதாக சொமேட்டோ நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்துள்ளார்.

Zomato
Zomato
author img

By

Published : Oct 12, 2020, 7:14 PM IST

கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் இறுதி வாரம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய தேவைகளை தவிர மற்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது.

அதேபோல ஆன்லைனில் உணவு ஆர்டர் முறைகளுக்கும் தடை விதிக்கப்பட்டன. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஆன்லைனில் உணவு ஆர்டர் நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது ஆன்லைன் உணவு ஆர்டர்கள் கரோனாவுக்கு முந்தைய நிலையை அடைந்துள்ளதாக சொமேட்டோ நிறுவனத்தின் சிஇஓ தீபீந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தீபீந்தர் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவில் உணவு ஆர்டர்கள் கரோனாவுக்கு முந்தைய நிலையை அடைந்துள்ளது என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

சில நகரங்களில் கரோனாவுக்கு முந்தைய நிலையைவிட ஆர்டர்கள் 20 முதல் 30 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.

வரும் காலங்களில், ஆன்லைன் உணவு ஆர்டர்கள் 15 முதல் 25 விழுக்காடு அதிகரிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

மார்ச் 23ம் தேதிக்குப் பிறகு நாங்கள் 9.2 கோடி உணவு ஆர்டர்கள் நாங்கள் டெலிவரி செய்துள்ளோம். இதில் எங்கள் டெலிவரி ஏஜென்டுகள் மூலம் மற்றவர்களுக்கு காரோனா பரவிய நிகழ்வு எதுவும் நடைபெறவில்லை.

கடந்த சில மாதங்கள் எங்களுக்கு அதிர்ச்சிகளும் ஆச்சரியங்களும் நிறைந்தவை. எங்கள் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பு நடைமுறைகளை செயல்படுத்தினோம்" என்று பதிவிட்டுள்ளார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.