ETV Bharat / business

பட்ஜெட் 2020: நாகை மீனவர்கள், விவசாயிகள் அதிருப்தி - \பட்ஜெட் குறித்து அதிருப்தி தெரிவிக்கும் மீனவர்கள் விவசாயிகள்

நாகப்பட்டினம்: மத்திய அரசு அறிவித்த பட்ஜெட், மீனவர்களுக்கு உகந்தது அல்ல என மீனவர்களும், அரைத்த மாவை மீண்டும் அரைப்பது போல் பட்ஜெட் அமைந்துள்ளது என விவசாயிகளும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

பட்ஜெட் செய்திகள்
பட்ஜெட் குறித்து அதிருப்தி தெரிவிக்கும் மீனவர்கள்
author img

By

Published : Feb 1, 2020, 7:02 PM IST

2020ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் மீனவர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் நாகை மாவட்ட மீனவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

2022ஆம் ஆண்டில் 200 லட்சம் டன் மீன் உற்பத்தியைப் பெருக்க இலக்கு எவ்வாறு நிர்ணயிக்கப் போகிறோம் என்பதை மத்திய அரசு தெளிவாக விளக்க வேண்டும் என்றும், 200 லட்சம் டன் உற்பத்தி என்பது பாரம்பரிய மீன்பிடித் தொழிலை நசுக்கிவிட்டு பன்னாட்டு கம்பெனிகளை வளர்த்தெடுக்கும் முயற்சி எனவும் மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பட்ஜெட் குறித்து அதிருப்தி தெரிவிக்கும் மீனவர்கள்

மேலும், சென்ற பட்ஜெட்டில் அறிவித்த நீலப்புரட்சி திட்டத்தின்கீழ் விசைப்படகு கட்டும் பணி என்ன ஆனது எனவும் அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். அரசு அறிவிக்கும் திட்டங்கள் முழுமையாக செயல் வடிவத்திற்கு வருவதில்லை என குற்றம்சாட்டியுள்ள அப்பகுதி மீனவர்கள், மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் மத்திய பட்ஜெட்டில் எந்தவித வரவேற்பும் இல்லை எனவும் அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இதேபோல் மத்திய பட்ஜெட் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள விவசாயிகள், அரைத்த மாவை மீண்டும் அரைப்பது போல பட்ஜெட் அமைந்திருப்பதாகவும், ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல் கேஸ் உள்ளிட்ட விவசாய நிலங்களை விவசாயிகளிடமிருந்து பிடுங்கிக்கொண்டு விவசாயிகளை பாதிக்கக்கூடிய திட்டங்களை அறிவித்துவிட்டு விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி ரூபாய் கடன் உதவி அளிக்கவுள்ளதாகக் கூறுவது ஏமாற்று வேலை என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பட்ஜெட் 2020: என்.ஐ.பி. உள்கட்டமைப்பு திட்டத்திற்கு ரூ.103 லட்சம் கோடி ஒதுக்கீடு

Intro:மத்திய அரசு அறிவித்த பட்ஜெட், மீனவர்களுக்கு உகந்தது அல்ல: பன்னாட்டு கம்பெனிகளுக்கு பயன்படும் என மீனவர்களும், அரைத்த மாவை மீண்டும் அரைப்பது போல் பட்ஜெட் அமைந்துள்ளது என விவசாயிகளும் கருத்து.
Body:Visual in mojo

மத்திய அரசு அறிவித்த பட்ஜெட், மீனவர்களுக்கு உகந்தது அல்ல: பன்னாட்டு கம்பெனிகளுக்கு பயன்படும் என மீனவர்களும், அரைத்த மாவை மீண்டும் அரைப்பது போல் பட்ஜெட் அமைந்துள்ளது என விவசாயிகளும் கருத்து.

2020 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் மீனவர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள திட்டம் நாகை மீனவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது 2022ஆம் ஆண்டில் 200 லட்சம் டன் மீன் உற்பத்தியை பெருக்க இலக்கு எவ்வாறு செயல்படுத்தப் போகிறோம் என்பதை மத்திய அரசு தெளிவாக விளக்க வேண்டும் என்றும் 200 லட்சம் டன் உற்பத்தி என்பது பாரம்பரிய மீன்பிடித் தொழிலை நசுக்கி விட்டு பன்னாட்டு கம்பெனிகளை வளர்த்தெடுக்கும் முயற்சி என்று மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனிடையே மீன் வளத்தை பெருக்க விசைப்படகு மூலம் மீன் பிடிக்கும் முன்முயற்சி மேற்கொண்ட காமராஜர் கொண்டு வந்த முறை இன்னும் அதே அளவில் இருப்பதாக கூறும் நாகை மீனவர்கள், சென்ற பட்ஜெட்டில் அறிவித்த நீலப்புரட்சி திட்டத்தின்கீழ் விசைப்படகு கட்டும் பணி என்ன ஆனது என கேள்வி? எழுப்பியுள்ளனர். மேலும் அரசு அறிவிக்கும் திட்டங்கள் முழுமையாக செயல் வடிவத்திற்கு வருவதில்லை என குற்றம்சாட்டும் அப்பகுதி மீனவர்கள் மீனவர்களின் வாழ்வாதாரம் காக்கும் வகையில் மத்திய பட்ஜெட்டில் எந்தவித வரவேற்பும் இல்லை என அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இதேபோல் மத்திய பட்ஜெட் குறித்த விவசாயிகள் கூறுகையில் அரைத்த மாவை மீண்டும் அரைப்பது போல பட்ஜெட் அமைந்திருந்ததாகவும், ஹைட்ரோகார்பன், மீத்தேன், ஷேல் கேஸ் உள்ளிட்ட விவசாய நிலங்களை விவசாயிகளிடமிருந்து பிடுங்கிக் கொண்டு விவசாயிகளை பாதிக்கக் கூடிய திட்டங்களை அறிவித்து விட்டு விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி ரூபாய் கடன் உதவி என்பது, ஏமாற்று வேலை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

பேட்டி 03. தமிழ்செல்வன் - கடைமடை விவசாயிகள் சங்கம்.

03a.மதியழகன். மீனவர். நாகை:

03b.குமரவேல்: தேசிய மீனவர் பேரவை துணைத்தலைவர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.