ஃபேஸ்புக்கில் அதிகம் போலிச் செய்திகள் பரவுவதால் அந்நிறுவனத்தின் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்துவரும் நிலையில், அரசியல்வாதிகளின் பதிவுகளின் உண்மைத்தன்மையை சரிபார்க்க மாட்டோம் என ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே ஃபேஸ்புக் நிறுவனத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பப்படும் நிலையில், அதன் செய்திகளை சரிபார்க்கும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அரசியல் சம்பந்தமான எந்த ஒரு கருத்தையும் சரிபார்க்க விருப்பம் இல்லை என்றும் மேலும் அரசியல் சார்ந்த விவாதங்களில் நடுவராகவும் இருக்க மாட்டோம் எனவும் ஃபேஸ்புக் கூறியுள்ளது.
அரசியல் பதிவுகளில் தலையிடமாட்டோம் என தெரிவித்த ஃபேஸ்புக் நிறுவனம், அரசியவாதிகள் என்னும் பட்டியலுக்குள் யாரெல்லாம் வருகிறார்கள் என்ற விளக்கத்தை வெளியிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.