கரோனா வைரஸ் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இச்சூழலில் எம்மாதிரியான ஊக்க நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்? பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல எம்மாதிரியான திட்டங்களை அறிவிக்க வேண்டும்? உணவின்றி தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு எம்மாதிரியான சலுகைகளை அறிவிக்க வேண்டும்? போன்ற கேள்விகள் நம்மிடையே எழுகின்றன. இது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பொருளாதார நிபுணர் ஆத்ரேயா நம்மிடையே பதிலளித்துள்ளார்.
கரோனா பாதிப்பு காரணமாக பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் மத்திய அரசு அறிவித்த நிதி போதுமானதாக இல்லை, அரசு கஞ்சத்தனமாக செயல்பட்டுள்ளது இதன்மூலம் தெரியவருகிறது என ஆத்ரேயா கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் ஒட்டுமொத்த உள்நாட்டு வருமானத்தில் 5 முதல் 10 விழுக்காடுவரை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஒதுக்குகின்றன. ஆனால், கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு அறிவித்த 1.7 லட்சம் கோடி ரூபாயானது இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு வருமானத்தில் 0.5 விழுக்காடே ஆகும். அதிலும் சில பிழைகள் உள்ளன. ஆராய்ந்து பார்த்தால் 1 லட்சம் கோடி ரூபாய்கூட இருக்காது. நிதிநிலை அறிக்கையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் இதில் கணக்கு காட்டப்படுகின்றன" என்றார்.
வெளிமாநில தொழிலாளர்கள் குறித்து பேசிய ஆத்ரேயா, "எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையுமின்றி ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் வெளிமாநில தொழிலாளர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். இருப்பிடம், உணவு போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் தொழிலாளர்கள் அவதிக்குள்ளானார்கள். போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டதால் சொந்த மாநிலத்திற்கு செல்ல முடியாமல் தவித்தனர். தொற்றை அவர்கள் பரப்பினார்கள் போன்ற கட்டமைப்பை ஊடகங்கள் உருவாக்கின. பாதிக்கப்பட்டவர்களை எதிரிகளாக காட்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அரசின் நடவடிக்கைகள் அதனை ஊக்குவித்தது." என்றார்.
கரோனா வைரஸ் நோயின் பாதிப்பை பொருளாதார ரீதியாக மத்திய அரசு எவ்வாறு எதிர்கொள்கிறது?
கரோனா வைரஸ் நோய் பாதிப்பு காரணமாக மாநில அரசுகள் நிதி நெருக்கடியை சந்தித்துள்ளன. அதிலிருந்து மீளும் வகையில் பெட்ரோல், மது ஆகியவற்றின் விலையை மாநில அரசுகள் உயர்த்தியுள்ளன. வேறெந்த வகையில் மாநில அரசுகள் நிதியை திரட்டலாம்?
இதையும் படிங்க: 3 மாதங்களில் மீள்வோம்.. கிரெடாய் தலைவர் ஸ்ரீதரன் நம்பிக்கை!