நாசிக் (மகாராஷ்டிரா): விதைகளால் ஆன ராக்கி கயிறுகளுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்புள்ளது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த, மக்கும் தன்மைக் கொண்ட பொருள்களால் இந்த ராக்கி கயிறுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. சிறு மண்கலவைகளுக்குள் மூலிகை மற்றும் பூ விதைகள் பொறிக்கப்பட்டிருக்கும் இந்த ராக்கி கயிறுகள் 10 முதல் 130 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதுவரையில் 7000 முதல் 8000 வரையிலான கயிறுகள் விற்றுள்ளன.
கரோனா ஊரடங்கின் காரணமாக பெரும்பாலான குடிமக்களின் நிதி நிலைமை மோசமடைந்தது. இந்த காலகட்டத்தில், மாவட்டத்தின் சம்ருதி பல்நோக்கு சமூக அமைப்பு மற்றும் சாவி மஹிலா பச்சாட் குழுமத்தின் பெண்கள் இணைந்து தன்னம்பிக்கையுடன் மூன்று மாதங்களாக விதை ராக்கிகளை தயாரிக்கத் தொடங்கினர்.
நெய் குழந்தை ஹன்சிகா புகைப்படத் தொகுப்பு
சாமந்தி, துளசி ஆகிய விதைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த சூழலுக்கு உகந்த ராக்கிகளுக்கு நாசிக், மும்பை, புனே, ஜல்கான், அவுரங்காபாத், ஜெய்ப்பூர், சென்னை ஆகிய நகரங்களில் அமோக வரவேற்புள்ளது.