பாரத ஸ்டேட் வங்கியின் புதிய தலைவராக தினேஷ் குமார் காரா என்பவரை மத்திய நிதியமைச்சகம் இன்று நியமித்துள்ளது. தற்போதைய தலைவரான ரஜ்னீஷ் குமாரின் பதவிக்காலம் இன்றுடன் (அக்.07) நிறைவடைகிறது.
இந்நிலையில், புதிய தலைவராக தினேஷ் குமாரை நியமிக்க, கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி வங்கிப் பணியாளர் வாரியம் பரிந்துரை செய்தது. இதையடுத்து அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு புதிய தலைவராக தினேஷ் குமார் காராவை நியமிப்பதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
எம்.பி.ஏ பட்டதாரியான தினேஷ் குமார் காரா, கடந்த 1984ஆம் ஆண்டு பாரத ஸ்டேட் வங்கியில் புரோபேஷனரி ஆபீசராகப் பணியில் சேர்ந்தார். 33 ஆண்டு அனுபவம் மிக்க தினேஷ் குமாருக்கு வங்கி நிர்வாகத்துடன் சர்வதேச வங்கிகளின் இயக்கத்திலும் சிறப்பான அனுபவம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கூட்டு வட்டி செலுத்தியோருக்கு பணம் திரும்ப தரப்படும்