சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றிமைத்து வருகின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் விலை சனிக்கிழமையான இன்றும் உயர்ந்துள்ளது.
தேசிய தலைநகரில் புதன்கிழமை பெட்ரோல் விலை 55 பைசா மற்றும் டீசல் லிட்டருக்கு 63 பைசா அதிகரித்து 78.37 ரூபாய் ஆகவும், 77.06 ரூபாய் ஆகவும் அதிகரித்துள்ளது. மார்ச் 16 முதல் 83 நாட்கள் இடைவேளைக்குப் பிறகு ஜூன் 7 முதல் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தத் தொடங்கியுள்ளன.
ஒரு அறிக்கையின்படி, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் (Crude oil Rates) விகிதங்கள் ஒரு பீப்பாய்க்கு சுமார் 20 டாலர்கள் ஆக உயர்ந்து, கடந்த மாதம் மத்திய அரசு கலால் வரிகளை உயர்த்திய பின்னர், அரசு விற்பனை செய்யும் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் தாங்கள் விற்கும் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலுக்கும் சுமார் ரூ .8 இழப்பை சந்தித்து வருகின்றன.
எனவே, பற்றாக்குறையை ஈடுகட்ட அடுத்த இரண்டு வாரங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மேலும் உயர்த்தப்படலாம். எரிபொருள் விலைகள் கடைசியாக மார்ச் 16 அன்று திருத்தப்பட்டன. ஆனால் சில மாநில அரசாங்கங்கள் தங்கள் வருவாயை உயர்த்துவதற்காக மதிப்பு கூட்டப்பட்ட வரி (வாட்) அல்லது செஸ் ஆகியவற்றை உயர்த்தின. இது கரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் விதமாக போடப்பட்ட ஊரடங்கு காலத்தில் குறைந்தது. கடந்த 14 நாள்களில் மட்டும் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 6.73 ரூபாய் மற்றும் டீசல் லிட்டருக்கு 7.07 ரூபாய் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அகராதியிலிருந்து நீங்குமா அகதி என்னும் சொல்? இப்படிக்கு சக அகதி