கேரளாவைச் சேர்ந்த தனியார் வங்கியான தனலட்சுமி வங்கியின் ஆண்டு பொதுக் கூட்டம், இன்று (செப்.30) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வங்கியின் நிர்வாக இயக்குனர், தலைமைச் செயல் அலுவலர் பதவிகளில் உள்ள சுனில் குர்பக்சனை பதவியிலிருந்து நீக்கக்கோரி பங்குதாரர்கள் சார்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் சுனிலுக்கு ஆதரவாக வெறும் 9.51 பேர் மட்டுமே வாக்களித்த நிலையில், அவரது பதவி நீக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து 90.49 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர். முன்னதாக மற்றொரு தனியார் வங்கியான லட்சுமி விலாஸ் வங்கியின் நிர்வாக இயக்குனரை பதவி நீக்கம் செய்ய ஆதரவு தெரிவித்து அந்த வங்கியின் பங்குதாரர்கள் வாக்களித்தனர்.
இதைத் தொடர்ந்து தற்போது தனலட்சுமி வங்கியும் இதேபோன்ற நிர்வாக ரீதியாக சிக்கலை சந்தித்துள்ளது, வங்கித் துறையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நாட்டின் உற்பத்தித் துறையில் தொடரும் வீழ்ச்சி