கரோனா பாதிப்பால் பல துறை நிறுவனங்கள் சரிவைச் சந்தித்துவருவதாலும், வணிகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருப்பதாலும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது. இந்திய பொருளாதாரம் மட்டும் அல்லாமல் அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் சரிவை நோக்கியே காணப்படுகிறது.
இது தொடர்பாக பல மதிப்பீட்டு நிறுவனங்கள், பொருளாதார அறிஞர்கள் இந்த நிதி ஆண்டு எப்படி இருக்கும் எனத் தங்களது கருத்துகளை வெளியிட்டுவருகின்றனர்.
அந்த வகையில் ஆசிய வளர்ச்சி வங்கி, "ஆசியாவில் உள்ள வளரும் நாடுகள் அனைத்தும் இந்தாண்டு வளர்ச்சி அடையாது. அதே நேரத்தில் இந்தியாவின் பொருளாதாரம் இந்த நிதியாண்டில் நான்கு விழுக்காடாகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியாண்டு என்பது அடுத்த வருடம் மார்ச் 31ஆம் தேதிவரை ஆகும். தெற்காசிய நாடுகள் அனைத்தும் பொருளாதார சரிவை சந்திப்பதால் 20200-2021ஆம் நிதி ஆண்டில் தெற்காசிய நாடுகளின் சிலவற்றின் பொருளாதார வளர்ச்சி மூன்று விழுக்காடாகச் சுருங்க வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: நிச்சயம் கரோனாவை வெல்வோம் - உலக சுகாதார அமைப்பு