ETV Bharat / business

"துக்ளக் ஆட்சி நடைபெறுகிறது" - டி.கே.ரங்கராஜன் - பண மதிப்பிழப்பு குறித்து பொருத்தர அறிஞர்கள் கருத்து

சென்னை: மூன்று ஆண்டுகள் கழிந்தும் பண மதிப்பிழப்பின் தாக்கம் இன்று பொருளாதாரத்தை பாதிப்பதால் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் கூறியுள்ளார்.

demonetisation
author img

By

Published : Nov 8, 2019, 11:31 PM IST

பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றுடன் மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதனால் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் இன்னும் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன், "மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகள் செல்லாது என பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டது.

கருப்புப் பண ஒழிப்பு, தீவிரவாதத்திற்கு நிதி திரட்டுவதை தடுப்பது மற்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார்.

விவசாயத்திற்கும் வரி கொண்டு வந்த மோடி

50 நாட்களில் இது நடைபெறவில்லை என்றால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என்று அவர் கூறியிருந்தார். இதில் எதுவுமே நடைபெறவில்லை, இதனால் அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

தற்போது பல்வேறு அமைப்புகள் பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்கின்றன. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் அதன் தாக்கம் உள்ளது. கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை தோல்வியடைந்துள்ளது. அமைப்பு சாரா தொழில் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது, சிறு தொழில்கள் அழிந்துவிட்டது, கூட்டுறவு வங்கிகள் பெரும் பாதிப்பை சந்தித்தது.

According to PAN India Report Still "Black Money" is in Progress

பண மதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டின் எதிர்காலத்தை பாதித்துள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தீவிரவாதம் ஒழிக்கப்படவில்லை, கள்ள நோட்டும் தற்போது புழக்கத்தில் உள்ளது, முன்பவைவிட குறைவான அளவில் இருந்தாலும் அவை முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்தாலும் அனைத்து தரப்பு மக்களுக்கும் இணைய வழிப் பணப்பரிவர்த்தனை செய்ய போதுமான வசதிகள் இல்லை. மக்கள் பெரும்பாலும் நாணய பரிமாற்றத்தையே விரும்புவதாக ஆய்வு முடிவு ஒன்று கூறுகிறது.

இதற்கு முன்பும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், நடைமுறையில் உள்ள பொருளாதாரம் பாதிக்காத வகையில் செய்யப்பட்டது. ஆயிரம் ரூபாயும் ஐநூறு ரூபாயும் செல்லாது என்று கூறி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சிட்டனர். தற்போது அதனையும் செல்லாது என அறிவித்து மீண்டும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சிடப்போவதாகக் கூறப்படுகிறது. இங்கு ஒரு துக்ளக் ஆட்சி நடைபெறுகிறது" என்று கூறினார்.

இருக்கிற பொருளாதாரம் பாதிக்காமல் பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்
இது தொடர்பாக பேசிய தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, "பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வியாபாரிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு இன்னும் தீர்க்கப்படவில்லை. கடந்த 2016இல் இருந்து வியாபாரம் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த தீபாவளி வரை இதன் தாக்கம் இருந்தது. சாமானியர்கள் வணிகத்தை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது புதிய கடை தொடங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை. டிஜிட்டல் பொருளாதாரம் என்று கூறி மின்னணு பணப் பரிவர்த்தனையை அரசு ஊக்குவிக்கிறது, ஆனால் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கமிஷன் பிடிக்கப்படுகிறது. இதனால் வியாபாரிகளின் லாபம் குறைகிறது. ரொக்கப் பறிமாற்றம் இல்லை என்றால் வணிகம் இல்லாத சூழல் ஏற்படும்" என்று கூறினார்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வியாபாரிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு இன்னும் தீர்க்கப்படவில்லை

இதையும் படிங்க: அதெல்லாம் இல்ல! - இந்தியா பொருளாதாரத்தில் வளர்ந்துவருகிறது!

Intro:

Body:script in mail

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.