ETV Bharat / business

சிட்டி யூனியன் வங்கி அரையாண்டு செயல்பாட்டு அறிக்கை தாக்கல்..!

சென்னை:Q2 காலாண்டு முடிவில் 193.54 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதாக சிட்டி யூனியன் வங்கியின் தலைமை செயல் அலுவலர் காமக்கோடி தெரிவித்துள்ளார்.

CUB Net profit
author img

By

Published : Nov 7, 2019, 11:27 PM IST

கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கி, நடப்பு 2019-20 நிதியாண்டியின் இரண்டாவது காலாண்டில் வங்கியின் செயல்பாடு குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அந்த வங்கியின் நிர்வாக இயக்குநனரும், தலைமை செயல் அலுவலருமான காமக்கோடி சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து இரண்டாவது காலாண்டில் வங்கியின் செயல்பாடு குறித்தும், வருங்காலத்தில் வங்கியின் செயல்பாடுகள் குறித்தும் விவரித்தார். இது குறித்து அவர் கூறுகையில், கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில், சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம் 193.54 கோடி ரூபயாகும்.

கடந்த நிதியாண்டில் இது 167 கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 15 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது. வங்கிகளின் பிரதான வருவாயான வட்டி வருவாய் 11 சதவிகித வளர்ச்சி அடைந்து 1,036.82 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த அரையாண்டில், சிட்டி யூனியன் வங்கியின் மொத்த வருவாய் 2,424 கோடி ரூபாயாக உள்ளது.

வரிக்குப் பிந்தைய லாபமானது 379.18 கோடி ரூபாயாக உள்ளது. வங்கியின் மொத்த வாராக்கடன் 3.41 சதவிகிதமாகவும், நிகர வாராக்கடன் 1.90 சதவிகிதமாகவும் உள்ளது. சிட்டி யூனியன் வங்கிக்கு தற்போது 650 கிளைகள் உள்ள நிலையில் இனி வரும் நாட்களில் மேலும் 50கிளைகள் திறக்கப்படும். இவற்றில் 60 சதவிகித கிளைகள் தமிழ்நாட்டில் இருக்கும்.

சிட்டி யூனியன் வங்கி அரையாண்டு செயல்பாட்டு அறிக்கை

மேலும் சிட்டி யூனியன் வங்கி தொடங்கப்பட்டு 115 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, வரும் 23ஆம் தேதி சென்னையில் விழா ஒன்று நடைபெறும். இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார். நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார மந்த நிலை தமிழ்நாட்டில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை, வங்கியின் செயல்பாடு சீராக உள்ளது என்று அவர் கூறினார்.

சிட்டி யூனியன் வங்கியின் 2019- 20 இரண்டாவது காலாண்டு செயல்பாட்டின் முக்கிய அம்சங்கள்:

வங்கிக்கு வட்டி மூலம் கிடைக்கும் நிகர வருவாய் 3 சதவிகிதம் உயர்ந்து 411 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

வங்கியின் லாபம் 15 சதவிகிதம் அதிகரித்து 193 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

வங்கி வழங்கிய கடன்கள் (அட்வான்ஸ்) 12சதவிகிதம் உயர்ந்து 33 ஆயிரத்து 279 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

வங்கியில் செய்யப்பட்டுள்ள டெபாசிட்கள் 34 ஆயிரத்து 534 கோடி ரூபாயில் இருந்து 17 சதவிகிதம் உயர்ந்து 40 ஆயிரத்து 451 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

வங்கியின் ஒட்டுமொத்த வணிகம் 73 ஆயிரத்து 730 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க: Q2 காலாண்டு முடிவு வெளியீடு: உயர்வை சந்தித்த டாடா ஸ்டீல் நிறுவனம்!

Intro:Body:சென்னை:

கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கி, நடப்பு 2019- 20 நிதியாண்டில் இரண்டாவது காலாண்டில் வங்கியின் செயல்பாடு குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அந்த வங்கியின் நிர்வாக இயக்குநனரும் தலைமை செயல் அதிகாரியுமான காமக்கோடி சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து இரண்டாவது காலாண்டில் வங்கியின் செயல்பாடு குறித்தும், வருங்காலத்தில் வங்கியின் செயல்பாடுகள் குறித்தும் விவரித்தார். கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில், சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம் 193.54 கோடி ரூபயாக உள்ளது. கடந்த நிதியாண்டில் இது 167 கோடி ரூபாயாக இருந்த நிலையில் 15 சதவிகித வளர்ச்சி அடைந்துள்ளது. வங்கிகளுக்கு பிரதான வருவாயான வட்டி வருவாய் 11 சதவிகித வளர்ச்சி அடைந்து 1036.82 கோடி ருபாயாக உள்ளது. கடந்த அரையாண்டில், சிட்டி யூனியன் வங்கியின் மொத்த வருவாய் 2424 கோடி ரூபாயாக உள்ளது. வரிக்குப் பிந்தைய லாபமானது 379.18 கோடி ரூபாயாக உள்ளது. வங்கியின் மொத்த வாராக்கடன் 3.41 சதவிகிதமாகவும், நிகர வாராக்கடன் 1.90 சதவிகிதமாகவும் உள்ளது. சிட்டி யூனியன் வங்கிக்கு தற்போது 650 கிளைகள் உள்ள நிலையில் இனி வரும் நாட்களில் மேலும் 50 கிளைகள் திறக்கப்படும் என்றும் இவற்றில் 60 சதவிகித கிளைகள் தமிழகத்தில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிட்டி யூனியன் வங்கி தொடங்கப்பட்டு 115 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, வரும் 23 ஆம் தேதி சென்னையில் விழா ஒன்று நடைபெறும் என்றும் இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார் என்றும் காமக்கோடி தெரிவித்தார். நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார மந்த நிலை தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றும் வங்கியின் செயல்பாடு சீராக உள்ளது என்றும் அவர் கூறினார்.

சிட்டி யூனியன் வங்கியின் 2019- 20 இரண்டாவது காலாண்டு செயல்பாட்டின் முக்கிய அம்சங்கள்:

வங்கிக்கு வட்டி மூலம் கிடைக்கும் நிகர வருவாய் 3 சதவிகிதம் உயர்ந்து 411 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
வங்கியின் லாபம் 15 சதவிகிதம் அதிகரித்து 193 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
வங்கி வழங்கிய கடன்கள் (அட்வான்ஸ்) 12 சதவிகிதம் உயர்ந்து 33 ஆயிரத்து 279 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
வங்கியில் செய்யப்பட்டுள்ள டிபாசிட்கள் 34 ஆயிரத்து 534 கோடி ரூபாயில் இருந்து 17 சதவிகிதம் உயர்ந்து 40 ஆயிரத்து 451 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
வங்கியின் ஒட்டுமொத்த வணிகம் 73 ஆயிரத்து 730 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
Conclusion:visual in mojo
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.