ETV Bharat / business

Share Market: 14 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டிய கச்சா எண்ணெய் விலை - கோதுமை பஞ்சம்

கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 8 டாலர் கூடி 130 டாலரில் வர்த்தகமாகிறது. இது 14 ஆண்டுகளில் இல்லாத உச்சம் எனவும்; கூடிய விரைவில் கச்சா எண்ணெய் விலை 150 டாலரைத் தொடும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

Share Market
Share Market
author img

By

Published : Mar 7, 2022, 6:58 PM IST

பங்குச்சந்தைகளின் வீழ்ச்சிக்கான காரணம் முதலில் உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் பதற்றம் என்றார்கள், அதனால் கச்சா எண்ணெய் விலை கூடிக்கொண்டே இருக்கும் என்றார்கள். அதன்பின் கோதுமை பஞ்சம் தலைதூக்கும், அதனால் விலை உயரும் என்றார்கள்.

பின்னர், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரியும் என்றார்கள். இப்படியே பல்வேறு காரணங்களைக்கூறி சரிவுக்கு மேல் காரணம் தேடிக்கொண்டிருந்த வேளையில், செபி அமைப்பில் இருந்த ஆனந்த் சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணா கைது என்ற தகவலும் தற்போது வந்துள்ளது. ஆகவே, வீழ்ச்சிக்குக் காரணம் தேவையில்லை, தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டிய கதையாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது, பங்குச்சந்தைகளின் வீழ்ச்சி.

ரூ. 5 லட்சம் கோடி இழப்பு

வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை (இன்று) சென்செக்ஸ் கிட்டத்தட்ட 1,600 புள்ளிகளில் வீழ்ச்சி தொடங்கி, இறுதியில் 1,491 புள்ளிகள் குறைந்து வர்த்தகத்தை நிறைவு செய்திருக்கிறது. அதேபோல, தேசிய பங்குச்சந்தைக் குறியீடான நிஃப்டி 382 புள்ளிகள் குறைந்து, வர்த்தகத்தை நிறைவு செய்திருக்கிறது.

ஆபரணத்தங்கத்தின் விலை அதிகரிப்பு

ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 101 ரூபாய் கூடி, சவரனுக்கு 808 ரூபாய் உயர்ந்திருக்கிறது. கச்சா எண்ணெய் விலையோ பீப்பாய் ஒன்றுக்கு 8 டாலர் கூடி 130 டாலரில் வர்த்தகமாகிறது.

இது 14 ஆண்டுகளில் இல்லாத உச்சம் எனவும்; கூடிய விரைவில் 150 டாலரைத் தொடும் எனவும் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு 76.96ஆக இருக்கிறது. இன்று மட்டும் ஐந்து லட்சம் கோடி ரூபாயை இழந்திருக்கிறது, பங்குச்சந்தை. அத்தோடு முக்கிய கட்டமான 16,000 புள்ளிகளை தக்கவைக்க முடியவில்லை என்பது கூடுதல் தகவல்.

இன்றைய வர்த்தகத்தில் பாரதி ஏர்டெல், ஹெச்.சி.எல். டெக்னாலஜி, டாடா ஸ்டீல், இன்போஸிஸ் ஆகியன மட்டும் சற்றே லாபத்தில் முடிந்தன.

இதையும் படிங்க: தேசிய பங்குச் சந்தை முறைகேடு: சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 7 நாள் காவல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.