ஆட்டம் காணவைக்கும் கொரோனா
சீன நாட்டில் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகின் பெரும்பாலான நாடுகளில் எந்த ஒரு துறையையும் விட்டுவைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
தொழில்நுட்பம், மின்னணு எனப் பல துறை நிறுவனங்கள் கொரோனா வைரஸ் தாக்குதலால் கடும் சரிவை சந்தித்துவரும் சூழலில், தற்போது கச்சா எண்ணெய் நிறுவனத்தையும் இந்தக் கொரோனா ஆட்டம் காணவைத்துள்ளது.
குறையும் எரிபொருள் தேவை
கொரோனா தொற்று வேகமாகப் பரவிவருவதால், பல நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதனால் எரிபொருள் தேவை வெகுவாகக் குறைந்துவிட்டது. பல நிறுவனங்கள், தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்றச் சொல்வதால் தனிநபர் எரிபொருள் பயன்பாடும் குறைந்துள்ளது.
இதனால் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மேலும் சில கச்சா எண்ணெய் நிறுவனங்கள் 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சரிந்துள்ளன.
வீழ்ச்சியால் லாபம்
ஒருபுறம் இது சரிவை சந்தித்தாலும், இந்தியாவிற்கு இது லாபமாகவே பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் விலையும் அதிகமாகக் குறையும் எனக் கூறப்படுகிறது.
இதனால் இந்தியாவிற்குப் பல கோடி ரூபாய் சேமிப்பாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஊழியர்களுக்கு ஒர்க் ஃப்ரம் ஹோம் அளித்த ட்விட்டர் நிறுவனம்