ETV Bharat / business

இ.எம்.ஐ. தளர்வு விருப்பத்தை வாடிக்கையாளர்களிடம் வழங்கிய ஆக்ஸிஸ் வங்கி - இ.எம்.ஐ. தளர்வு விருப்பத்தை வாடிக்கையாளர்களிடம் வழங்கிய ஆக்ஸிஸ் வங்கி

டெல்லி: இ.எம்.ஐ. மூன்று மாதம் நீட்டிப்பு விவகாரத்தில் ஆக்ஸிஸ் வங்கி தனது வாடிக்கையாளர்களின் விருப்பத்தை கோருகிறது.

COVID-19  Axis Bank offers EMI deferment on loans for 3 months  EMI deferment on loans for 3 months  Axis Bank  business news  இ.எம்.ஐ. தளர்வு விருப்பத்தை வாடிக்கையாளர்களிடம் வழங்கிய ஆக்ஸிஸ் வங்கி  ஆக்ஸிஸ் வங்கி, இ.எம்.ஐ. ஒத்திவைப்பு, கரோனா

author img

By

Published : Apr 2, 2020, 8:11 PM IST

Updated : Apr 2, 2020, 9:02 PM IST

கோவிட்19 தொற்று நோய் தீவிரமாக பரவி வருவதால், இந்திய ரிசர்வ் வங்கி, பொதுத்துறை, தனியார் வங்கிகள் மற்றும் வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாதம் இ.எம்.ஐ. வசூலிக்கக் கூடாது என்று அறிவுறுத்தியது. இது தொடர்பாக வங்கிகள் தற்போது முக்கிய முடிவெடுத்து வருகின்றன.

அதன்படி பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் வாடிக்கையாளர்களின் விருப்பத்தை கேட்டுள்ளன. ஹெச்.டி.எப்.சி. உள்ளிட்ட வங்கிகள் ஏற்கனவே வாடிக்கையாளர்களின் விருப்பத்தை கேட்டு வாடிக்கையாளர்கள் விரும்பினால் அவர்களின் கணக்கிலிருந்து பணத்தை இ.எம்.ஐ. பிடித்தம் செய்கின்றன.

வாடிக்கையாளர்கள் தங்களின் விருப்பத் தேர்வில் வேண்டாம் (நோ) என்று கூறும்போது அவர்களின் பணம் வங்கிக் கணக்கிலிருந்து பிடித்தம் செய்யப்படாது. இதேபோல் ஆக்ஸிஸ் வங்கியும் தற்போது வாடிக்கையாளர்களின் விருப்பத்தின் பேரிலே இ.எம்.ஐ. விவகாரத்தை விட்டுள்ளது.

  • At a time when the nation is facing unprecedented challenges due to COVID-19, we extend our support by offering moratorium on payment of EMIs/instalments and interest on Term Loans/Credit Card dues, and/or deferment of interest payments on Working Capital facilities. pic.twitter.com/CxxSUmqg8t

    — Axis Bank (@AxisBank) April 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது குறித்து ட்விட்டரில் ஆக்ஸிஸ் வங்கி, “கோவிட் -19 நடவடிக்கை குறித்த இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை அடுத்து, நாங்கள் இப்போது உங்களுக்கு ஒரு இ.எம்.ஐ., ஒத்திவைப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

பல்வேறு கால கடன்கள், கிரெடிட் கார்டு நிலுவைத் தொகைகள் உள்ளிட்டவைகளின் தவணை தொகை மார்ச் 1, 2020 முதல் மே 31, 2020 வரை தள்ளிவைக்க இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. இது வட்டியோ அல்லது முதல் தள்ளுப்படியோ அல்ல. மாறாக ஒத்திவைப்பு மட்டுமே.

இதையும் படிங்க: சரியான நடவடிக்கை ! தவறான நேரம் - ப.சிதம்பரம் கருத்து

Last Updated : Apr 2, 2020, 9:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.