ETV Bharat / business

விரைவில் மற்றுமொரு பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை அறிவிக்கும் மத்திய அரசு - இந்திய பொருளாதாரத்தின் மீது கரோனாவின் தாக்கம்

டெல்லி: மத்திய அரசு விரைவில் மற்றுமொரு பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தை அறிவிக்கும் என்று பொருளாதார விவகார செயலர் தருண் பஜாஜ் தெரிவித்தார்.

Centre to soon announce another round of stimulus

author img

By

Published : Nov 3, 2020, 7:47 PM IST

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு கடந்த மார்ச் 25ஆம் தேதி ஊரடங்கை அமல்படுத்தியது. இந்த ஊரடங்கு காரணமாக இந்தியப் பொருளாதாரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில், கடந்த மே மாதம் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் தற்சார்பு இந்தியா என்ற பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். இருப்பினும், இந்த அறிவிப்பு எதிர்பார்த்த அளவு பொருளாதார வளர்ச்சியைத் தூண்டவில்லை.

இந்நிலையில், மற்றொரு பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க வாய்ப்புள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பொருளாதார விவகார செயலர் தருண் பஜாஜ், "அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நிதி அமைச்சகத்துடன் ஆலோசனை நடைபெற்றுவருகிறது. இது குறித்த அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுவார்" என்றார்.

இதையும் படிங்க: கார் விற்பனை உயர்வால் மகிழ்ச்சியடைய தேவையில்லை - ஆட்டோமொபைல் டீலர் சங்க தலைவர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.